உணவு பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும் முருகன் இட்லி கடை தக்காளி சட்னி! காரசாரமான ரெசிபி இதோ!

உணவு பிரியர்கள் சிலர் பல இடங்களில் பலவிதமான உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் ஒரு சில இடங்களில் அவர்கள் சாப்பிடும் தனித்திருவமான உணவு வகைகளும் அதன் சுவைகளையும் என்றும் மறக்க முடியாது. அந்த வகையில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் இரு தரப்பு மக்களுக்கும் முருகன் இட்லி கடையையும் அங்கு கொடுக்கப்படும் தக்காளி சட்னியின் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அதன் சுவை நாக்கில் நிலைத்து நிற்கும். அதே சுவையில் நம் வீட்டில் எளிமையான முறையில் தக்காளி சட்னி செய்ய வேண்டுமா ரெசிபி இதோ…

இந்த தக்காளி சட்னி செய்வதற்கு நன்கு பழுத்த தக்காளி பழங்களை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் ஒரு அகலமான கடாயில் நன்கு பழுத்த ஆறு தக்காளி பழம், நான்காக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்து இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து நன்கு வேக வைக்க வேண்டும்.

ஐந்து முதல் பத்து நிமிடங்களில் தக்காளி நன்கு வெந்து வெடித்து இருக்கும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து தக்காளி வெங்காயம் வெள்ளைப் பூண்டுவை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து காலத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் 8 சேர்த்துக் கொள்ளலாம். பொன்னிறமாக இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும்.

வதக்கியே இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக நாம் வேகவைத்து வைத்திருக்கும் தக்காளி ,வெங்காயம், வெள்ளைப் பூண்டு இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி சேர்க்கும் பொழுது அதன் தோள்களை நீக்கி சதை பகுதியை மட்டும் மிக்ஸியில் சேர்த்து மையாக அரைக்க வேண்டும். இவை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தக்காளி அரைக்கும் பொழுது சிறிய எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி மற்றும் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

லஞ்ச் பாக்ஸ்க்கு தக்காளி சாதம் தான் வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு ஒருமுறை வறுத்து அரைத்த கர்நாடகா ஸ்டைல் தக்காளி சாதம் ட்ரை பண்ணுங்க…

இறுதியாக ஒரு பெரிய கடாயின் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதை அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து மிதமான தீயில் ஒன்று முதல் இரண்டு நிமிடம் நல்ல கொதிக்க விட வேண்டும். இப்பொழுது சுவையான முருகன் இட்லி கடை தக்காளி சட்னி தயார். இந்த சட்னியை சூடான இட்லியுடன் வைத்து சாப்பிடும் பொழுது நம் நாக்கு அந்த சுவையில் மெய்மறந்து மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும்.