வாயு தொல்லை முதல் வாதம் வரை இதயம் முதல் இருமல் வரை பல பிரச்சனைகளுக்கு ஒரே நிவாரணம்! எளிமையான ரெசிபி…

உடலில் ஏற்படும் வாய்வு தொல்லை முதல் வாத பிரச்சனைகள், இதயம் சார்ந்த பிரச்சனைகள், சளித்தொல்லை, இருமல் போன்ற அனைத்திற்கும் ஒரே அருமருந்து கற்பூரவள்ளி இலை. இந்த கற்பூரவள்ளி இலையை எப்படி பயன்படுத்துவது என பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் இப்பொழுது கற்பூரவள்ளி இலை வைத்து எளிமையாக செய்யக்கூடிய துவையல் ரெசிபி ஒன்றை பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் அரை தேக்கரண்டி தனியா, அரை தேக்கரண்டி மிளகு , அரை தேக்கரண்டி சீரகம், காய்ந்த வத்தல் மூன்று சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் சிறிய முழு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்துக் கொள்ளலாம். வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி விட வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கற்பூரவள்ளி இலை நல்ல வதங்கி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் வறுத்த பொருட்களின் புளியை தனியாக எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தனியாக முதலில் அரைத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக புளி, கற்பூரவள்ளி இலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவையல் அரைக்கும்பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அட இதுல கூட பொடி செய்யலாமா…. வாயை பிளக்க வைக்கும் சுவையில் சத்து நிறைந்த பொடி ரெசிபி!

சற்று கெட்டியாக கொரகொரப்பாக அரைத்தால் கற்பூரவள்ளி துவையல் தயார். இதனுடன் பொடியாக நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சூடான சாதம், இட்லி, தோசை, பழைய சோறு என அனைத்திற்கும் கச்சிதமான கற்பூரவள்ளி துவையல் தயார்.

Exit mobile version