அட இதுல கூட பொடி செய்யலாமா…. வாயை பிளக்க வைக்கும் சுவையில் சத்து நிறைந்த பொடி ரெசிபி!

பொதுவாக நம் வீட்டில் பல வகையான பொடி இருக்கும். அதிலும் இட்லி, தோசை போன்ற காலை உணவுகளுக்கு இட்லி பொடி தவறாமல் பயன்படுத்துவது அதிகம். அதிலும் கருவேப்பிலை பொடி, முருங்கைக்கீரை பொடி என பலவகையான பொடி ரெசிபிகள் தற்பொழுது நம் வீடுகளில் இருப்பதை பார்த்திருப்போம். இதில் முருங்கைக்கீரை பொடி சற்று அதிகமான சத்துக்களை தரக்கூடியது. முருங்கைக்கீரை வைத்து பொடி, முருங்கைப் பூ வைத்து துவரம், ரசம் என பல ரெசிபிகள் செய்திருந்தாலும் முருங்கைக்காய் வைத்து பொதுவாக குழம்பு கூட்டு சமைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை முருங்கைக்காய் விதை வைத்து அருமையான பொடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இரண்டு கப் அளவிற்கு முருங்கை விதை எடுத்து மிதமான தீயில் கடாயில் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
நாம் இப்பொழுது முருங்கைக்கீரை எடுத்த அதே கப்பில் ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக அதே கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு சிறிய துண்டு கட்டி பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். கட்டி பெருங்காயம் இல்லாத பட்சத்தில் ஒரு தேக்கரண்டி தூள் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக இதில் காரத்திற்கு ஏற்ப 15 முதல் 20 காய்ந்த வத்தல் சேர்க்க வேண்டும்.

வத்தலை கடாயில் வறுக்கும்பொழுது கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் 5 பல் வெள்ளைப் பூண்டு இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வறுத்த பொருட்களை ஒரு தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான்.. அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக பஞ்சாபி ஸ்டைலில் ட்ரை பண்ணி பார்க்கலாம் வாங்க!

இறுதியாக நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு சூடு ஆறும் வரை ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுவையான முருங்கை விதை பொடி தயார். இந்த பொடியை நாம் எப்பொழுதும் இட்லி பொடி சாப்பிடுவது போல இட்லி, தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். முருங்கை விதையில் கண் பார்வைக்கு தேவையான விட்டமின் ஏ, ரத்த சோகை நீக்குவதற்கான சத்துக்கள், மூட்டு வழியில் இருந்து நிவர்த்தி பெறுவதற்கான கால்சியம் சத்து என அதிகமாக உள்ளது.

Exit mobile version