இன்றைய வாழ்க்கை முறையில் சர்க்கரை நோய் பலருக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் தற்பொழுது வரத் துவங்கியுள்ளது. இதற்கு நாம் வாழும் வாழ்க்கை முறை பெரிய காரணமாக இருந்தாலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் முக்கிய காரணமாக இருக்கிறது. சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டு அதன் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த துவையல் மிகவும் உதவியாக இருக்கும். வாங்க பெரிய நெல்லிக்காய் மல்லி துவையல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி கருப்பு உளுந்து, இரண்டு துண்டு பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அடுத்ததாக 5 பல் வெள்ளை பூண்டு, , காரத்திற்கு ஏற்ப மூன்று அல்லது ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
உளுந்து நிறம் மாறும் வரை வதக்கினால் போதுமானது. அதன் பிறகு மூன்று அல்லது ஐந்து பெரிய நெல்லிக்காய்களை கழுவி சுத்தம் செய்து அதன் விதையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.
நெல்லிக்காய் சேர்த்து ஒரு நிமிடம் எண்ணெயோடு நன்கு வதக்கிய பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை பொடியாக சேர்த்து நறுக்கி வதக்கி கொள்ள வேண்டும். கொத்தமல்லி இலை நன்கு வதங்கி வரவும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ளலாம்.
வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்து அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அருமையான முழு நெல்லிக்காய் கொத்தமல்லி துவையல் தயார். இந்த துவையல் சூடான சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.
வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த துவையல் சாப்பிட்டு வரும்பொழுது சர்க்கரை அளவு நன்கு குறைந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.