நம்ம ஊரு பூரி சாப்பிட்டு சலித்து விட்டதா… வாங்க ஜார்க்கண்ட் ஸ்பெஷல் துஸ்கா சாப்பிடலாம்!

நம்ம வீடுகளில் வழக்கமாக கோதுமை மற்றும் ரவை சேர்த்து செய்யும் பூரி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் இந்த பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான உணவு வகைகளிலும் ஒன்று. . இந்த முறை சற்று வித்தியாசமாக பூரி போல புசு புசுவென இருக்கும் ஜார்கண்ட் ஸ்பெஷல் துஸ்கா பூரி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசி, அரை கப் கடலைப்பருப்பு, கால் கப் உளுந்து சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 4 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு கலந்து மீண்டும் நான்கு மணி நேரம் குளிக்க வைக்க வேண்டும். இந்த இடைவேளையில் பூரிக்கு தேவையான மசாலா வகைகளை தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு தக்காளி பழங்களை அரைத்து விழுதுகளாக குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி பழம் நன்கு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்த வேக வைத்த ஒரு கப் நறுக்கிய உருளைக்கிழங்கு, அரை கப் பச்சை பட்டாணி சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும்.

கறுக்கு முறுக்கு என நொறுக்கி தள்ளும் அப்பளம் வைத்து அருமையான அப்பளம் புளிக்குழம்பு!

நான்கு மணி நேரம் கழித்து நாம் அரைத்து வைத்திருக்கும் மாவில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி சாட் மசாலா, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது மாவு தயார் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நம் தயார் செய்து வைத்திருக்கும் மாவுகளை இட்லி போல ஊற்றினால் பூரி போல உப்பலாக புசுபுசுவென வந்துவிடும். இப்பொழுது குஜராத் ஃபேமஸ் துஸ்காபுரி தயார்.