அரிசி, பருப்பு என எதுவும் ஊற வைக்காமல்… கடையில் மாவு வாங்கும் நேரத்தில் வீட்டிலேயே சட்டென தோசை மாவு தயார் செய்ய வேண்டுமா? ரெசிபி இதோ..

சுவையான பஞ்சு போல இட்லி, , முறுமுறுவென தோசை சாப்பிட எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால் இதற்கான மாவு தயாரிப்பதற்கான வேலை அதிகம். குறைந்தது ஐந்து முதல் எட்டு மணி நேரம் அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அதன் பின் மாவாக அரைத்து எடுத்து மீண்டும் 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பஞ்சு போல இட்லியும் தோசையும் நாம் சாப்பிட முடியும்..

சில நேரங்களில் நம் வீட்டில் இட்லி தோசை மாவு இல்லாத சமயங்களில் கடையில் வாங்குவது வழக்கம். ஆனால் கடையில் வாங்கும் அந்த நேரத்தில் கூட நம் வீட்டிலேயே எளிமையான பஞ்சு மாதிரி மிருதுவான தோசை சுடுவதற்கான மாவு தயார் செய்யலாம். இன்ஸ்டன்ட் தோசை மாவு வீட்டிலேயே தயார் செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, காரத்திற்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு பச்சை மிளகாய், அரை கப் புளித்த தயிர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ரவை. அரை கப் கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மாவை சேர்த்து கொள்ளலாம். இந்த மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு ஒரு சேர கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் இந்த மாவை ஒரு ஐந்து நிமிடம் அப்படியே ஓரமாக வைத்துவிடலாம். ஐந்து நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது ரவை நன்கு நீரில் ஊறி இருக்கும். இதில் தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி சோடா உப்பு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதில் சோடா உப்பு கண்டிப்பாக சேர்க்க வேண்டும். உடனடியாக தயார் செய்யும் மாவு என்பதால் சோடா உப்பு சேர்த்தால் மட்டுமே மாவு மிருதுவாக இருக்கும். அதன் பின் இந்த மாவில் தோசை மாவு பதம் வரும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது மாவு தயார்.

கடலை மாவு வைத்து எப்பொழுதும் பஜ்ஜி போண்டா தானா… வாங்க வித்தியாசமான முறையில் தித்திப்பான பாயாசம் செய்யலாம்….

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்த்து கள்ளு சூடானதும் நாம் கலந்து வைத்திருக்கும் மாவை வட்டமாக ஊற்றிக் கொள்ள வேண்டும். சற்று கனமாகவே மாவை ஊற்றிக் கொள்ள வேண்டும். மிருதுவாக ஊற்றும் பொழுது தோசை சரியாக வராமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

இருபுறமும் நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை தோசையை வேக வைத்து எடுத்தால் சுவையான இன்ஸ்டன்ட் தோசை தயார். இந்த தோசைக்கு வீட்டில் செய்யும் காரமான தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version