கடலை மாவு வைத்து எப்பொழுதும் பஜ்ஜி போண்டா தானா… வாங்க வித்தியாசமான முறையில் தித்திப்பான பாயாசம் செய்யலாம்….

பெரும்பாலும் கடலை மாவு வைத்து மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா செய்வது வழக்கம். மேலும் இந்த கடலை மாவு காரசாரமான பலகாரங்கள் செய்யும் மட்டுமே அதிகப்படியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கடலை மாவு வைத்து உடனடியாக தித்திப்பான பாயாசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

இனி வீட்டில் விசேஷ நாட்கள் வந்தால் பால் பாயாசம், பருப்பு பாயாசம் என ஒரே மாதிரியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக கடலை மாவு பாயாசம் செய்து அனைவரையும் அசத்தலாம் வாங்க…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முந்திரி பருப்பு, 10 காய்ந்த திராட்சை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்ததாக கடாயில் மீதம் இருக்கும் நெய்யில் கால் கப் கடலை மாவு சேர்த்து கலக்க வேண்டும்.

கடாயில் கடலைமாவு சேர்த்தவுடன் தீயை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யுடன் சேர்த்து கடலை மாவு ஒரு சேர கலரும் படி கலந்து கொள்ள வேண்டும். கடலை மாவு பச்சை வாசனை செல்லும் வரை நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

கடலை மாவின் நிறம் லேசாக மாறியதும் கடாயில் பால் சேர்த்து கொள்ள வேண்டும். பாலுடன் சேர்ந்து கடலை மாவு நன்கு கலந்து கொள்ள வேண்டும். கட்டிகள் விழாத வண்ணம் ஒரு சேர கலந்தவுடன் வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இருமல், சளி தொல்லையா… ஐந்தே நிமிடத்தில் எளிமையான நிவாரணம் இதோ… புதினா ரசம் செய்வதற்கான ரெசிபி!

மிதமான தீயில் பால் சேர்த்து கொதிக்கும் நேரத்தில் நாம் வேக வைத்திருக்கும் ஒரு கப் ஜவ்வரிசியை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவை மிதமான தீயில் கொதிக்கும் நேரத்தில் அரைக்கப் வெல்லத்தை தண்ணீருடன் சேர்த்து பாகு காட்சி கொள்ள வேண்டும்.

ஜவ்வரிசி ஒரு கொதி வந்ததும் வெல்லப்பாகை வடிகட்டி கடாயில் ஊற்றி ஒரு சேர கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் முதலில் வறுத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் காய்ந்த திராட்சைகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பாயாசத்தை மிதமான தீயிலேயே சமைக்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடத்தில் சுவையான கடலை மாவு பாயாசம்.

Exit mobile version