பத்தே நிமிடத்தில் அரிசி மாவு இல்லாமல் முறுமுறு தோசை ரெசிபி!

தோசை பிரியர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அதுவும் ஹெல்தியாக சாப்பிட நினைப்பவர்களுக்கு இந்த தோசை மிகவும் பிடித்தமான ரெசிபி வகைகளில் ஒன்றாக மாறிவிடும். அந்த அளவிற்கு சமைப்பதற்கு எளிமையானதாகவும் சாப்பிடுவதற்கு சுவையானதாகவும் மற்றும் ஹெல்த்தி நிறைந்த முறுமுறு தோசை செய்வதற்கான ரெசிபி இதோ…

இந்த வகையான முறுமுறு தோசை செய்வதற்கு வெள்ளை பூசணியை பயன்படுத்திக் கொள்ளலாம். வெள்ளை பூசணியில் நடுத்தர அளவுள்ள இரண்டு துண்டுகளை எடுத்து தோள்களை நீக்கி கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விதையுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

நறுக்கிய வெள்ளைப் பூசணி துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் ரவை, கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, விதை இல்லாமல் பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு தேக்கரண்டி சீரகம், இரண்டு தேக்கரண்டி மிளகு இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு கொத்து கருவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த மாவை பத்து நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். ஒரு தோசை கல்லை அடைப்பில் வைத்து மிதமான தீயில் நன்கு சூடு படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நமது விருப்பத்திற்கு ஏற்ப முறுமுறு அல்லது மெத்து மெத்து தோசை வடிவத்தில் தோசை மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பத்து நிமிடத்தில் அட்டகாசமான ரவா பாயாசம்! சுவை மாறாத ரெசிபி இதோ…

தோசையில் தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து உண்ணும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து கொள்ளலாம். எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வேகவைத்து எடுக்கும் பொழுது காய்கறியின் பச்சை வாசனை சிறிதளவு கூட தோசையில் தெரியாது. இதற்கு நாம் விருப்பத்திற்கு ஏற்ப தேங்காய் சட்னி, காரச் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

வீட்டில் மாவு இல்லாத சமயங்களில் இது போன்ற நீர் சத்து நிறைந்த காய்கறிகள் வைத்து அரிசி பயன்படுத்தாமல் அருமையான தோசை செய்து முடித்து விடலாம்.