இட்லி, தோசை, பொங்கல் இவற்றிற்கு சாம்பார் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். ஆனால் நேரம் குறைவாக இருக்கும் பொழுது சாம்பார் அதை சுவையில் பருப்பு இல்லாமல் எளிமையான முறையில் தண்ணீர் சாம்பார் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
முதலில் ஒரு குக்கரில் 10 முதல் 15 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நன்கு பழுத்த மூன்று தக்காளிப்பழம், இரண்டாக கீறிய மூன்று பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சாம்பார் தூள், தேவையான அளவு தண்ணீர் கலந்து மூன்று முதல் ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் விசில் வந்து அழுத்தம் குறைந்த பிறகு மத்து கொண்டு நன்கு இந்த கலவையை கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக 5 பல் வெள்ளைப்பூண்டை தட்டி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெள்ளை பூண்டு பொன்னிறமாக நிறம் மாறியதும் இரண்டு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
மாலை நேரங்களில் ரோட்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும் பட்டாணி சுண்டல் மசாலா!
அடுத்து நாம் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் குறைந்தது ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான தண்ணீர் சாம்பார் தயார். இட்லி மற்றும் பொங்கலுக்கு தாராளமாக இந்த தண்ணீர் சாம்பார் செய்து சாப்பிடும் பொழுது பருப்பு சாம்பாரின் அதே சுவையில் சிறப்பாக இருக்கும்.