வீடுகளில் எவ்வளவு தான் பார்த்து பார்த்து வித விதமான சமையல்கள் செய்தாலும் அதன் சுவையும் மனமும் ஹோட்டல்களில் இருப்பது போல வருவதில்லை. அதிலும் ரோட்டு கடைகளில் பரிமாறப்படும் குருமா மற்றும் சாம்பாரின் வாசம் ரோட்டில் செல்பவர்களையும் வழிமறித்து சாப்பிட வைக்கும். அந்த அளவிற்கு கமகம வாசத்துடன் ரோட்டுக்கடைகளில் பரிமாறப்படும் தண்ணி குருமா நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
முதலில் இந்த குருமாவிற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் 3 பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி, அரை கப் தேங்காய் துருவல், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டி இஞ்சி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி கசகசா, ஒரு தேக்கரண்டி பொரிகடலை, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது குக்கரின் நான்கு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு பிரியாணி இலை, , மூன்று துண்டு பட்டை, 3 கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு அண்ணாச்சி பூ, சிறிதளவு கல்பாசி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு புதினா சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் இரண்டு சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கி மசிந்து வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா வலுதுவை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாவை குக்கரில் சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
சிக்கன் சிப்ஸ் உடன் போட்டி போடும் அளவிற்கு மொறு மொறு சோயா சிப்ஸ்! அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபி இதோ..
இப்பொழுது இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கூடுதலாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது குக்கரை மூடி இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும். இரண்டு விஷல்கள் வந்த பிறகு குக்கரை திறந்து கூடுதலாக ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இப்பொழுது இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் ஹோட்டல்களில் பரிமாறப்படும் தண்ணி குருமா தயார்.