தக்காளி அதிகமாக இருந்தால் எப்போதும் தக்காளி தொக்கு, தக்காளி, தக்காளி ஊறுகாய் மட்டும் தானா… வாங்க வித்தியாசமாக தக்காளி துவையல் செய்யலாம்!

தங்கம் போல விலை உச்சத்தில் இருக்கும் தக்காளி சில நேரங்களில் மலிவு விலையில் குறைவாக கிடைக்கும். அந்த நேரங்களில் நாம் தக்காளி அதிகப்படியாக வாங்கி நமக்கு விருப்பத்திற்கு ஏற்றவாறு தொக்கு, ஊறுகாய் என பதப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். அப்படி தக்காளி சீப்பாக கிடைக்கும் நேரங்களில் தக்காளியை வைத்து எப்பொழுதும் போல ஒரே ரெசிபியை செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் தக்காளி வைத்து துவையல் ஒன்று செய்யலாம் வாங்க… இந்த தக்காளி தொவையல் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

அருமையான தக்காளி துவையல் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி தனியா, அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக மாற்றிக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் நன்கு பழுத்த மூன்று தக்காளிப் பழம் அல்லது நான்கு தக்காளி பழத்தை நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி பாதியாக வதங்கியதும் 10 பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.

இஞ்சி மற்றும் பூண்டு பாதி வதங்கியதும் காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளலாம். தக்காளி நன்கு மசிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிய நெல்லிக்காய் அளவு புளி, கைப்பிடி அளவு மல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இப்பொழுது வதக்கிய இந்த பொருட்களையும் ஏற்கனவே மிக்ஸியில் பொடி செய்த மசாலாக்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் துவையலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடை குறைக்க ஆசைதான்… ஆனால் கொள்ளு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இதுபோல கொள்ளு வாசமே இல்லாத கொள்ளு குழம்பு செய்வதற்கான ரெசிபி இதோ…

மேலும் அதே மிக்ஸி ஜாரில் அரை தேக்கரண்டி நாட்டுச்சர்க்கரை அல்லது வெள்ளம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவையல் மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை சற்று பரபரவென அரைத்துக்கொண்டால் போதுமானது..

இந்த தக்காளி துவையலுக்கு தனியாக தாளிப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொள்ளலாம். அப்படியே அரைத்த தக்காளி துவையலை தோசையுடன் வைத்து சாப்பிடும் பொழுது சொர்க்கத்தை பார்ப்பது போல இருக்கும். தக்காளி துவையலில் சுவையும் அவ்வளவு அருமையாக இருக்கும்.