20 நிமிடத்தில் குக்கரில் உதிரி உதிரியான தக்காளி பிரியாணி! ரெசிபி இதோ…

பிரியாணி சாப்பிட தோன்றும் நேரங்களில் பிரியாணிக்கு பதிலாக அதே சுவை மற்றும் வனத்துடன் வீட்டிலேயே இளமையான முறையில் தக்காளி பிரியாணி சாப்பிட நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அசைவ பிரியாணிகளின் அதே சுவை இந்த தக்காளி பிரியாணியில் மாறாமல் அப்படியே இருப்பதால் அவசரமான காலங்களில் இந்த பிரியாணி ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க எளிமையான முறையில் தக்காளி பிரியாணி குக்கரில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் ஒரு கப் பார்ப்பது அரிசியை தேவையான அளவு தண்ணீர் கலந்து அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு பிரியாணி இலை, 4 கிராம்பு, ஒரு பெரிய துண்டு பட்டை, 3 ஏலக்காய், 2 ஸ்டார் பூ, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கைபிடி அளவு முந்திரி பருப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். பொடியாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இதனுடன் கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்தில் வதங்கி நிறம் மாறி வரும் பொழுது நன்கு பழுத்த தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி மூன்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தக்காளி வதங்கி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் அரை தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.

குஷ்பூ இட்லிக்கு சைடிஷ் ஆக… நடிகை குஷ்புவிற்கு பிடித்த சுட்ட கத்திரிக்காய் சட்னி!

அடுத்ததாக அரை மணி நேரம் ஊறவைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை தண்ணீர் களைந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக உப்பு ஒரு முறை சரிபார்த்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை முடிவிட வேண்டும்.

மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான தக்காளி பிரியாணி தயார். இந்த பிரியாணி தக்காளி சாதம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எளிமையான முறையில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாகவும் செய்து கொடுத்து விடலாம்..