பரங்கிக்காய் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே, சிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு காய்கறி ஆகும். மேலும் பரங்கிக்காயில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. பரங்கிக்காயின் இலைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றலை உடலுக்கு வழங்கிட இந்த பரங்கிக்காய் துணை புரிகிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த பரங்கிக்காயை வைத்து சுவையான பரங்கிக்காய் அல்வா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். பரங்கிக்காய் அல்வா இந்திய அளவில் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும்.
அட்டகாசமான சுவையில் பாதாம் அல்வா… இப்படி செய்து பாருங்கள்!!!
பரங்கிக்காய் அல்வா செல்வதற்கு இரண்டு பெரிய பரங்கிக்காய் துண்டுகளை எடுத்து அதன் தோல்களை நன்றாக சீவி விட வேண்டும். தோல் சீவிய பரங்கிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி இதனை அளவாக தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பரங்கிக்காய் வெந்ததும் இதனை அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆற விடவும். இந்த பரங்கிக்காய் ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் கால் கிலோ அளவு சர்க்கரை சேர்த்து அதை அரை டம்ளர் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பாகு இளம் கம்பி பதம் வந்தால் போதுமானது. இளம் கம்பி பதம் வந்ததும் இதில் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பரங்கிக்காயை சேர்க்க வேண்டும். இதனை கைவிடாமல் நன்றாக கிளற வேண்டும். பரங்கிக்காய் சர்க்கரைப் பாகோடு சேர்ந்து கெட்டியாக வரும் பொழுது 200 கிராம் அளவு வரை நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக இதில் சேர்க்க வேண்டும்.
ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா!
இப்பொழுது ஒரு சிறிய கடாயில் மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 முந்திரி பருப்பு, 10 திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்ததை அல்வாவுடன் சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடலாம் அவ்வளவுதான் சுவை நிறைந்த பரங்கிக்காய் அல்வா தயார்!