குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ் காலியா வரணுமா அப்போ மறக்காம செய்யுங்கள் பன்னீர் பிரியாணி!

குழந்தைகள் மாலை நேரத்தில் வீடு திரும்பும் பொழுது பெரும்பாலான தாய்மார்கள் முதலில் சோதிப்பது அவர்களின் லஞ்ச் பாக்ஸ் தான். இன்று காலையில் நாம் செய்து கொடுத்த உணவை முழுமையாக சாப்பிட்டார்களா என்று தான் பார்ப்பார்கள். லஞ்ச் பாக்ஸ் காலியாக இருந்தால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இல்லையேல் குழந்தை ஒழுங்காக குழந்தை சாப்பிடவில்லை என்று கவலைப்படுவார்கள்.

குழந்தைகளோ என்னதான் சத்தான உணவாக பார்த்து செய்தாலும் சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இனி கவலை வேண்டாம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸிற்கு சுவையான சத்தான இந்த பன்னீர் பிரியாணி செய்து கொடுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தையின் லஞ்ச் பாக்ஸ் மாலையில் காலியாக தான் வீட்டிற்கு வரும். வாருங்கள் இந்த பன்னீர் பிரியாணி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஈஸியா செய்யலாம் பன்னீர் மசாலா தோசை.. வீட்டில் உள்ளோர் வியந்து பாராட்டுவாங்க…!

பன்னீர் பிரியாணி செய்வதற்கு கால் கிலோ அளவு தண்ணீரை நடுத்தர அளவில் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குக்கரில் 2 மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை, மூன்று ஏலக்காய், மூன்று கிராம்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு பெரிய வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கி சேர்க்கவும் இது பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் மூன்று பச்சை மிளகாய் சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கைப்பிடி அளவு புதினா சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மசாலாக்கள் பச்சை வாசனை போனதும் நறுக்கிய ஒரு தக்காளி பழத்தை சேர்த்து அதையும் வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கி மென்மையானதும் கால் கப் அளவு தயிர் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு நாம் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து வதக்க வேண்டும். இதை நீண்ட நேரம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிமிடம் வரை வதக்கினால் போதும். ஊற வைத்த ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை நன்றாக கலைந்து அதை சேர்த்துக் கொள்ளலாம். அரிசியை மசாலாக்களுடன் சிறிது கலந்து விட வேண்டும்.

அடடா… என்ன சுவை! வாயில் வைத்ததும் கரையும் பன்னீர் ஜாமுன்…!

இப்பொழுது இதில் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக நறுக்கிய மல்லி தழையை தூவி விட வேண்டும். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடலாம் விசில் நன்கு அடங்கியதும் திறந்து பார்த்தால் அட்டகாசமான பன்னீர் பிரியாணி தயார்!