தஞ்சாவூர் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாரம்பரியமான தேங்காய் திரட்டுப்பால்!

தஞ்சாவூர் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் மட்டுமே பரிமாறப்படும் இந்த பாரம்பரியமான தேங்காய் திரட்டுப்பால் மிகவும் பிரபலம் அடைந்தது. தித்திக்கும் சுவையில் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் இந்த தேங்காய் பால் திரட்டு நம் வீட்டில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

இந்த தேங்காய் திரட்டுப்பால் செய்வதற்கு ஒரு கப் துருவிய தேங்காவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் தேங்காவிற்கு முக்கால் கப் வெல்லம் என்ற விதத்தில் முக்கால் கப் வெல்லத்தை பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அரிசி மாவு, துருவிய தேங்காய் ஒரு கப், முக்கால் கப் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த தேங்காய் திரட்டுப்பால் மிக சுவையாக வர வேண்டும் என்றால் நல்ல புதிய தேங்காய்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல் நல்ல தித்திப்பான வெல்லம் பயன்படுத்த வேண்டும்.

அடுத்ததாக ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, பொடியாக நறுக்கிய தேங்காய் அரை கப் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதை நெய்யில் நாம் அடைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.

கறி குழம்பு சுவையை மிஞ்சும் அளவிற்கு சுவையான முள்ளங்கி குழம்பு!

மிதமான தீயில் ஒரே வாக்கின் 10 முதல் 15 நிமிடங்கள் கலந்து கொள்ள வேண்டும். அரைத்து சேர்த்த தேங்காய் விழுதுகளில் தண்ணீர் வற்றி கேசரி பதத்திற்கு வரும்பொழுது நம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு தேங்காய்களை சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தேங்காய் பால் திரட்டு தயார்.

Exit mobile version