இந்த ஐந்து பொருள் போதும்..15 நிமிடத்தில் அருமையான புட்டிங் தயார்!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த புட்டிங் வீட்டில் செய்து கொடுத்து அசத்த நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி 15 நிமிடத்தில் புட்டிங் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு அகலமான கடாயில் கால் கப் வெள்ளை சர்க்கரையை சேர்த்து மிதமான தீயில் கிளற வேண்டும். இரண்டு நிமிடம் தொடர்ந்து கிளரும் பொழுது சர்க்கரை நன்கு கரைந்து கேரமல் பதத்திற்கு வந்து விடும். அடுத்ததாக புட்டிங் செய்யும் பாத்திரத்தில் இந்த கேரமலை சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் நான்கு பிரட் துண்டுகள், இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் 100 மில்லி லிட்டர் பால், அரை தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ், கால் கப் சேர்த்து நன்கு கலந்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெண்ணிலா எசன்ஸ் இல்லாத பட்சத்தில் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த அரைத்த மாவையும் நாம் முதலில் கேரமல் சேர்த்த அதை பாத்திரத்தில் அடுத்ததாக சேர்த்துக் கொள்ளலாம்.

உடலுக்கு நல்லதை அள்ளித்தரும் முருங்கைக்கீரை, ஆளி விதை சேர்த்த பூண்டு பொடி!

இப்பொழுது இந்த பாத்திரத்தை இட்லி வேக வைப்பது போல இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தை இட்லி தட்டின் மேல் வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். கண்டிப்பாக பாத்திரத்தின் மேல் மூடி போட்டு வேக வைக்க வேண்டும் இல்லை என்றால் தண்ணீர் உள்ள உள்ளே செல்ல வாய்ப்புள்ளது.

பத்து நிமிடம் கழித்து ஒரு குச்சியை வைத்து பாத்திரத்தில் நடுவேன் குத்தி பார்த்து சோதித்துக் கொள்ளலாம். குச்சியில் புட்டிங் மாவு ஒட்டாமல் வந்தால் புட்டிங் இப்பொழுது தயாராக மாறியுள்ளது. இப்பொழுது இதை ஒரு தட்டிற்கு மாற்றி தனக்கு விருப்பத்திற்கு ஏற்றார் போல் துண்டுகளாக வெட்டி பரிமாறினால் சுவையான புட்டிங் தயார்.

Exit mobile version