உடலுக்கு நல்லதை அள்ளித்தரும் முருங்கைக்கீரை, ஆளி விதை சேர்த்த பூண்டு பொடி!

இட்லி பொடி இருந்தால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் என நினைப்பவர்களுக்கு நாம் சாப்பிடும் இட்லி பொடியை மேலும் சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் மாற்ற இந்த ரெசிபி ஒரு உதவியாக இருக்கும். எப்போதும் போல செய்யாமல் சற்று வித்தியாசமாக உடலுக்கு மருத்துவ குணங்களை அள்ளித்தரும் ஒருங்கிக் கீரை, ஆளி விதை என பொருட்களை சேர்த்து இந்த இட்லி பொடி தயார் செய்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைத்து நல்ல மாற்றத்தை உணர முடியும். வாங்க இந்த பூண்டு பொடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு அகலமான கடாயில் 100 கிராம் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறை கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு, ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மூன்று பொருட்களையும் நன்கு வறுத்து தனியாக ஒரு தட்டிற்கு மாற்று விட வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு கப் ஆலிவ் விதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஆளி விதைகள் படபட என புரியும் நேரத்திற்கு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நான்கு துண்டு கட்டிப் பெருங்காயம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

அடுத்து காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் பத்து முதல் 15 சேர்த்துக் கொள்ளலாம். காய்ந்த வத்தல் வதக்கும் நேரத்தில் மற்றொரு பக்கம் 15 முதல் 20 பல் வெள்ளை பூண்டுவை இரண்டு நான்கு முறை இடித்து கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டிற்கு தோல் உரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இறுதியாக சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நன்கு ஈரப்பதம் செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது நாம் வருத்த பொருட்களையும் அதே தட்டிற்கு மாற்றிவிட வேண்டும். அடுத்ததாக கடாயில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

ரெஸ்டாரன்ட் சென்றாலே அனைவரும் விரும்பி ஆர்டர் செய்யும் சிக்கன் லாலிபாப்!

முருங்கைக் கீரையுடன் தேவைப்பட்டால் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். கருவேப்பிலை சேர்ப்பது அவரவர் விருப்பமே. மிதமான தீயில் கீரையின் நிறம் மாறாத வண்ணம் வறுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது முருங்கைக் கீரையும் அதே தட்டில் சேர்த்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். இப்பொழுது நாம் வறுத்த அனைத்து பொருட்களும் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு கல் உப்பு கலந்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான பொடி தயார்.

உடலுக்கு நல்ல பலன்களை அள்ளித் தரும் ஆளி விதை, முருங்கைக்கீரை சேர்க்க பூண்டு பொடி இப்பொழுது தயார்.

Exit mobile version