ரெஸ்டாரன்ட் சென்றாலே அனைவரும் விரும்பி ஆர்டர் செய்யும் சிக்கன் லாலிபாப்!

ரெஸ்டாரண்டிகளில் விருந்து சாப்பிட செல்லும் பொழுது அனைவரும் பல விதமான ரெசிபிகள் ஆர்டர் செய்தாலும் அனைவருக்கும் பொதுவாக பிடித்த ஒரே ரெசிபியாக இருப்பது சிக்கன் லாலிபாப். சிக்கன் வைத்து பல ரெசிபிகள் செய்தாலும் இந்த லாலிபாப் தனி மவுசு தான். வாங்க ரெஸ்டாரண்டின் அதே சுவையில் நம் வீட்டில் எளிமையான முறையில் சிக்கன் லாலிபாப் செய்வதற்கான ரெசிபி விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் அரை கிலோ எலும்புள்ள சிக்கன்களை வாங்கி நன்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஒரு குழி கரண்டி சோயாசாஸ், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பாதி எலுமிச்சை பழச்சாறு, மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி கான்பிளவர் மாவு, இரண்டு தேக்கரண்டி மைதா மாவு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகு சீரகத்தூள, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை சேர்க்காமல் மூன்று மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஜாம் ரெசிபி!

இப்பொழுது மசாலா கலவையை நன்கு மாவு போல தயார் செய்து கொள்ள வேண்டும். இதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மசாலாவுடன் சிக்கனை கலந்த பிறகு வெளியே வைத்தாலும் சரி அல்லது ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்தாலும் சரிதான்.

மசாலா நன்கு சிக்கனோடு ஊற வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் ஊறவைத்த சிக்கனை சேர்த்து பொன்னிறமாக வரும்வரை முன்னும் பின்னும் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது சுவையான ரெஸ்டாரன்ட் போன்ற சிக்கன் லாலிபாப் தயார்.

Exit mobile version