சர்க்கரை சேர்க்காமல் மூன்று மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஜாம் ரெசிபி!

நம் வீட்டு சுட்டி குழந்தைகளுக்கு பிரட்டில் ஜாம் வைத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இப்பொழுது பிரட்டுக்கு மட்டுமில்லாமல் தோசை, இட்லி, சப்பாத்தி, பழங்கள் என அனைத்திற்கும் ஜாம் வைத்து சாப்பிடும் பழக்கம் வந்துள்ளது. இப்படி குழந்தைகள் அதிகமாக சாப்பிடும் ஜாம் கடைகளில் வாங்காமல் நம் வீட்டிலேயே பீட்ரூட் வைத்து எளிமையான முறையில் ரிசர்வேட்டிவ் எதுவும் சேர்க்காமல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் இந்த ஜாம் 3 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத காரணத்தினாலும் வீட்டிலேயே தயார் செய்வதாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடலாம்.

முதலில் 250 கிராம் அளவுள்ள பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து தோள்களை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இனிப்பிற்காக 10 பேரிச்சம் பழங்களை விதைகளை நீக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நறுக்கிய பீட்ரூட் மற்றும் பேரிச்சம் பழங்களை ஒரு குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு கப் வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெல்லத்தை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். குக்கரில் இருந்து விசில்கள் வந்து அழுத்தம் குறைந்ததும் பீட்ரூட் மற்றும் பேரிச்சம்பழம் வேக வைத்ததில் மீதம் இருக்கும் தண்ணீரை வெல்லத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.
வேகவைத்த பீட்ரூட் மற்றும் பேரிச்சம் பழத்தை தனியாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

காளான் பிரியாணி சாப்பிட ஆசையா? ஒரு முறை காளான் தொன்னை பிரியாணி ட்ரை பண்ணலாம் வாங்க..

பீட்ரூட் வேகவைத்த தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பீட்ரூட் விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

பீட்ரூட் விழுது சேர்த்த பிறகு மூடி போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் பீட்ரூட் ஜாம் தயார்.

இந்த பீட்ரூட் ஜாம் வீட்டிலேயே எளிமையான முறையில் எந்த கலப்படமும் சேர்க்காமல் உருவாக்குவதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் தாராளமாகவும் சாப்பிடலாம்.

Exit mobile version