பச்சை பயிரில் அதிகப்படியான விட்டமின் சத்துக்கள் நிறைந்திருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்து இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் அதிகமாக கொண்டுள்ளது. குறிப்பாக உடல் எடை அதிகமாக இருப்போர் வாரத்தில் நான்கு முறையாவது பச்சை பயிறு சாப்பிட்டு வரும் நேரத்தில் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்து குறைக்க மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த பச்சை பயிறு வைத்து அருமையான பொங்கல் ரெசிபி செய்வது அதற்கான விளக்கம் இதோ…
ஒரு குக்கரில் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து உருகியதும் முக்கால் கப் பாசிப்பயிறு சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக அரை மணி நேரம் ஊற வைத்த ஒரு கப் அரிசி சேர்த்து நன்கு கொள்ள வேண்டும்.
இப்பொழுது அரிசி மற்றும் பருப்பு வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும். குறைந்தது மூன்று முதல் நான்கு விசில்கள் வரும் வரை மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வெல்லம் என்பது கணக்கு. அதன்படி ஒன்றரை கப் வெல்லத்தை ஒரு அகலமான கடாயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து தண்ணியாக கொதித்து வரும் நேரத்தில் ஒரு முறை வடிகட்டி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
மீண்டும் வெல்லத்தை கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது இரண்டு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லப்பாகு கெட்டியாக வரும் நேரத்தில் நாம் வேக வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதை கலந்து கொடுக்கும் நேரத்தில் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் ஆக மாற்ற வேண்டுமா? வாங்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் மிளகு கோழி பிரட்டல்!
தேங்காய்ப்பால் கட்டியாக இருக்க வேண்டும். தேங்காய் பாலுடன் சேர்ந்து அரிசி மற்றும் பருப்பு வெல்லம் இணைந்து ஒரு சேர கிளற வேண்டும். இந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும்.
இறுதியாக நாம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் திராட்சைகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான பாசிப்பருப்பு பொங்கல் தயார். இதை பரிமாறுவதற்கு முன்பாக அதை சூட்டில் மீண்டும் ஒருமுறை கரண்டி நெய் சேர்த்து கிளறி பரிமாறினால் சாப்பிடும் பொழுது சுவை அருமையாக மன மணக்கும் நெய்வாசத்தில் இருக்கும்.