இட்லி மாவு இல்லாத நேரத்தில் சுவையான இனிப்பு இட்லி!

இட்லி மாவு இல்லாத நேரங்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு இட்லி செய்யலாம் வாங்க. இந்த இட்லி குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரையும் திருப்தி படுத்தும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இனிப்பு இட்லி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் எந்த கப் கொண்டு கோதுமை மாவு அளந்து எடுத்துக் கொண்டோமோ அதே கப்பிற்கு ஒன்றரை கப் அளவு வெல்லம் எடுத்து ஒரு அகலமான வானிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றரை கப் வெல்லத்திற்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு நன்கு கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து தண்ணியாக இருக்கும் சமயத்தில் அதனை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டி நம் கோதுமை மாவு வைத்திருக்கும் அகலமான பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கோதுமை மாவுடன் வெல்லப்பாகு சேர்த்தவுடன் கை விடாமல் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்வதில் தவறு ஏற்பட்டால் கோதுமை மாவு கட்டி கட்டியாக மாறிவிடும்.

வெள்ளப்பாகு மற்றும் கோதுமை மாவு இரண்டும் ஒரு சேர கலந்து இட்லி மாவு பதத்திற்கு வரவேண்டும். அதன் பின் இந்த கலவையில் அரை தேக்கரண்டி ஆப்ப சோடா, ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இட்லி மாவு தயாராக உள்ளது.

ஐந்தே நிமிடத்தில் கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு!

இதை இட்லி பாத்திரத்தில் சேர்த்து வேக வைக்க வேண்டும். ஆனால் இட்லி தட்டில் துணி வைத்து இந்த மாவை சேர்த்து வேக வைக்க கூடாது. அதற்கு பதிலாக இட்லி தட்டில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து நன்கு தடவிக்கொள்ள வேண்டும். அதன் பின் இந்த மாவை ஒவ்வொரு குழியில் ஊற்றி இட்லி வேக வைப்பது போல வேக வைக்க வேண்டும்.

குறைந்தது ஏழு முதல் 10 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு மாவு வேகவேண்டும். அதன் பின் திறந்து பார்த்தால் சுவையான இனிப்பு இட்லி தயார். இந்த இனிப்பு இட்லி சுவையானதாக மட்டும் அல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.