இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷலான ஸ்வீட் ரெசிபி! இனி கடை பலகாரங்களுக்கு பாய் பாய் தான்…

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் நம் வீட்டில் என்ன பலகாரங்கள் செய்ய வேண்டும் என பேச்சு வார்த்தை வரத் தொடங்கி இருக்கும். எப்போதும் செய்யும் இனிப்பு பலகாரங்களை விட இந்த முறை சற்று வித்தியாசமாகவும் தித்திப்பான சுவையில் பலகாரங்கள் செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். கடையில் இனிப்பு பலகாரங்கள் வாங்கி பழக்கப்பட்டவர்கள் இந்த முறை வீட்டில் எளிமையான முறையில் ஸ்வீட் செய்து அசத்தலாம் வாங்க.. வீட்டிலேயே சில நொடிகளில் தயார் செய்யக்கூடிய அனைவருக்கும் பிடித்தமான பட்டன் பாதுஷா செய்வதற்கான ரெசிபி இதோ…

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் தயிர், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா, அரை தேக்கரண்டி பேக்கிங் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் ஒரு கப் மைதா சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

மாவை ஒருசேர பிசைந்து கொள்ளும் நேரத்தில் இரண்டு சிட்டிகை உப்பு, , நான்கு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மேலும் கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் லேசாக தண்ணீர் தெளித்து இறுக்கமாக பிசைந்து எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்த மாவை ஒரு ஓரமாக வைத்து விட வேண்டும். அடுத்ததாக பாதுஷாவிற்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.
சர்க்கரை நன்கு கரைந்து கொதித்து வரும் நேரத்தில் நான்கு முதல் ஐந்து ஏலக்காய் இடித்து சேர்த்துக் கொள்ளலாம். ஏலக்காய் சேர்த்த பிறகு நிறத்திற்காக இரண்டு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் அடுப்பை அனைத்து விட்டு அதன் பிறகு சர்க்கரை பாகு பாதி அளவு எலுமிச்சை பல சாறு கலந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் முதலில் கலந்து வைத்திருக்கும் மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து சிறிய உளுந்து வடை போல் நடுவில் மையப் பகுதியில் சிறிய அழுத்தம் கொடுத்து முன்னாள் அழுத்தி வட்ட வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே வடிவத்தில் நாம் பிசைந்து வைத்திருக்கும் அனைத்து மைதா மாவுகளையும் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 முட்டைக்கோஸ் வைத்து குருமா கூட செய்யலாமா?  மிகவும் ஈஸியான  மற்றும் சுவையான முட்டைக்கோஸ் குருமா ரெசிபி இதோ!

ஒரு அகலமான கடாயில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமாக சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் பொழுது தட்டி வைத்திருக்கும் பாதுஷாக்களை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.

மிதமான தீயில் பாதுஷாக்களை பொறுத்தெடுக்கும் போது மட்டுமே மாவின் உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் ஒரு சேர நன்கு வந்து மொறுமொறுப்பாக இருக்கும். இப்படி பொறித்து எடுத்த பாதுஷாக்களை தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம் சீனிப்பகில் கூறினால் சுவையான பட்டன் பாதுஷா தயார். இந்த தீபாவளிக்கு கடைகளில் பாதுஷா வாங்காமல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து பார்க்கலாம்.