குஷ்பூ இட்லிக்கு சைடிஷ் ஆக… நடிகை குஷ்புவிற்கு பிடித்த சுட்ட கத்திரிக்காய் சட்னி!

இட்லி பொதுவாக பஞ்சு போல மிருதுவாக இருந்தால் பலரும் குஷ்பூ இட்லி என பெயர் வைப்பது வழக்கமான ஒன்று. . இந்த முறை அந்த குஷ்பூ இட்லிக்கு சைடிஸ் ஆக நடிகை குஷ்பு அவர்களின் விருப்பமான சட்னி ஒன்று செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாங்க பத்தே நிமிடத்தில் சுட்ட கத்திரிக்காய் சட்னி எளிமையான முறையில் நம் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் இந்த சட்னி செய்வதற்கு முறையான கத்திரிக்காய் தேர்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சட்னி செய்வதற்கு முதலில் நன்கு தரமான பெரிய கத்திரிக்காய் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அந்த கத்திரிக்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து நான்கு பக்கமும் லேசாக கீரி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் உள்பக்கமாக நான்கு வெள்ளை பூண்டு, 2 பச்சை மிளகாய் வைத்து மேல் பக்கமாக எண்ணெய் தடவி தீயில் வாட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது எல்லா பக்கமும் ஒருசேர வெந்து வரும் வகையில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதே போல இரண்டு அல்லது மூன்று தக்காளி பழங்கள் மீதும் எண்ணெய் தடவி நன்கு நெருப்பில் வாட்டி சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காய் மற்றும் தக்காளிகளை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

அதன் பிறகு அதன் மேல் பக்கம் இருக்கும் கருப்பு தோள் நீக்கி சுத்தம் செய்து கொள்ளலாம். உள்ளே இருக்கும் சதை பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதை ஒரு மிக்ஸி ஜாரில் அல்லது அம்மியில் சேர்த்து ஒன்றுக்கு பாதியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கத்திரிக்காவை அரைக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி அரைக்கும் பொழுது மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டால் போதுமானது.

மாலை நேர ஸ்னாக்ஸ் ரெசிபியாக முட்டை பக்கோடா! எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து நாம் அரைத்து வைத்திருக்கும் கத்திரிக்காய் விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக நன்கு கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார்.