புரோட்டின் சத்து நிறைந்த சுண்டல் வைத்து இதுவரை தாராளமான ரெசிபிகள் பார்த்து உள்ளோம். இந்த முறை சுண்டல் வைத்து சற்று வித்தியாசமாக சூடு போல குழம்பு செய்வதற்கான விளக்கத்தை பார்க்க உள்ளோம். இந்த சூப் குழம்பு மழை நேரங்களில் ஏற்படும் தொண்டை கரகரப்பு, உடல் அசதி, உடம்பு வலி என அனைத்திற்கும் நல்ல அருமருந்தாக இருக்கும். வாங்க சுண்டல் சூப் குழம்பு எளிமையான முறையில் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்…
சுண்டல் குழம்பு செய்வதற்கு முதலில் சுண்டல் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 8 மணி நேரம் கழித்து நம் ஊற வைத்திருக்கும் சுண்டலை ஒரு குக்கரில் சேர்த்து 5 விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து மையாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். நல்லெண்ணெய் சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு சிறிய துண்டு பட்டை, அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதக்கும் பொழுது இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இரண்டு பச்சை மிளகாய், நறுக்கிய இரண்டு தக்காளி பலம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் மற்றும் தக்காளி பழம் நன்கு வதங்கி வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் அல்லது இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
சுட்டி குட்டிஸ்களுக்காக இன்ஸ்டன்ட் பன் தோசை ரெசிபி!
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் வேக வைத்திருக்கும் சுண்டலை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.சுண்டல் சிறுத்த பிறகு நாம் முதலில் வருத்த பொடி செய்து வைத்திருக்கும் மிளகு சீரகத்தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டி பதத்திற்கு வரும் சமயத்தில் ஐந்து அல்லது ஆறு பல் வெள்ளை பூண்டுவை இடித்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான சுண்டல் சூப் குழம்பு தயார்.