அசைவம் பொதுவாக சாப்பிடாதவர்கள் அதே சுவையில் காய்கறிகளை வைத்து பல வகையான உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவது பழக்கம். அந்த வகையில் நான்வெஜ் சுவையில் சுண்டல் வைத்து கபாப் செய்து ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக குழந்தைகளுக்கு கொடுத்து மகிழலாம் வாங்க. இந்த சுண்டல் கபாப் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….
இந்த சுண்டல் கபாப் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் சுண்டலை நன்கு கழுவி சுத்தம் செய்து மூங்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இந்த கபாப் செய்வதற்கு கருப்பு சுண்டல் பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும்.
இப்படி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க சுண்டலை அடுத்த நாள் ஒரு குக்கரில் சேர்த்து நான்கு முதல் ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த சுண்டலின் சூடு குறைந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுண்டலை அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அரைத்த இந்த விழுதுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதனுடன் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து முதலில் கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக இதில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு கொத்தமல்லி, பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கல்யாண வீட்டு பந்தி ஸ்பெஷல் தித்திக்கும் பைனாப்பிள் கேசரி!
இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நன்கு வட்ட வடிவில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது தபாப்பை பொரித்தெடுப்பதற்காக ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடேற்ற வேண்டும். அதில் மிதமான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நம் பட்ட வடிவில் தட்டி வைத்திருக்கும் கபா உருண்டைகளை அதில் சேர்த்து இருபுறமும் நன்கு பொன்னிறமாக வரும் வரை குறித்தெடுக்க வேண்டும்.
இப்பொழுது சூடான மற்றும் சுவையான சுண்டல் கபாப் தயார். இந்த சுண்டல் கபாப்யை தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.