கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த சுண்டைக்காய் வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

சுண்டைகாயில் பலவிதமான நன்மைகள் இருந்தாலும் நாளடைவில் நம் வீடுகளில் அதை வைத்து சமைக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் இதன் சுவை சற்று கசப்பாகவும் துவர்ப்பு நிறைந்ததாக இருப்பதே முக்கிய காரணமாகும். குழந்தைகள் பெரும்பாலும் இதை விரும்பி சாப்பிடுவது இல்லை. ஆனால் இனிப்பு அதிகமாக சாப்பிடும் குழந்தைகள் வாரத்தில் இரு முறையாவது சுண்டைக்காய் சாப்பிட்டு வருவதன் மூலமாக குடலில் ஏற்படும் குடல்புழு தொல்லை போன்றவற்றிலிருந்து எளிமையாக விடுபடலாம். கிராமங்களில் எளிமையில் கிடைக்கும் இந்த சுண்டைக்காய் வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஒன்று செய்யலாம் வாங்க…

முதலில் சுண்டைக்காய் சாதம் தயார் செய்வதற்கு தேவையான கிரேவி தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேக்கரண்டி தேங்காய், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழம் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு சாய்ந்த வத்தல், நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதியாக வதங்கியதும் ஒரு கப் கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கிய சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுண்டக்காயிலிருந்து விதையை பிரித்தெடுக்காமல் நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி அப்படியே கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

மிதமான தீயில் மூன்று முதல் ஐந்து நிமிடம் சுண்டைக்காய் நன்கு பொன்னிறமாக பொரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளலாம். பிறகு நான் மிக்ஸியில் அரைத்த விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை நன்கு கிளரி கொடுத்த பிறகு மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்று தொக்கு கெட்டியாக வரும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

மழை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லையை நொடியில் சரி செய்யும் வெற்றிலை சாதம்!

தொக்கு தண்ணீர் வற்றி கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கப் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி கொள்ளலாம். இப்பொழுது ஒருமுறை உப்பு சரிபார்த்து தேவைப்படும் அளவு உப்பு சரி செய்து கொள்ளலாம்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால் சுமையான சுண்டைக்காய் சாதம் தயார். இந்த சாதத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் இருக்கும் கொடுத்து விடலாம்.