பருப்பு இல்லாமல் அருமையான உருண்டை குழம்பு சாப்பிட வேண்டுமா? சோயா உருண்டை குழம்பு செய்வதற்கான ரெசிபி . இதோ….

கிராமத்து சமையலில் பருப்பு உருண்டை குழம்பிற்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள். இந்த பருப்பை குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே ஊற வைக்க வேண்டும். அப்படி நம் ஊறவைக்க தவறினால் அருமையான பருப்பு உருண்டை குழம்பு செய்ய முடியாது. ஆனால் பருப்பு உருண்டை குழம்பு சாப்பிட தோன்றும் நேரங்களில் சோயா வைத்து எளிமையான முறையில் அதை துறையில் உருண்டை குழம்பு செய்யலாம். சோயா உருண்டை குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.


முதலில் சோயாவை அரைமணி நேரத்திற்கு முன்பாக கொதிக்கும் நீரின் சேர்த்து வேக வைக்க வேண்டும். நீரில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக வைத்தால் சுவை அருமையாக இருக்கும்.

அரை மணி நேரம் கழித்து சோயா நன்கு வெந்ததும் அதன் நீரை பிழிந்து எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம்.

அரைத்து விழுதுகளை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி கறி மசாலா தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி கான்பிளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். சோயா மாவு சற்று தண்ணியாக இருக்கும் பட்சத்தில் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்த இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் ஐந்து முதல் 8 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அந்த நேரத்தில் மற்றொரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் 15 முதல் 20 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம், அரை கப் தேங்காய் துருவல், இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, ஐந்து முந்திரி பருப்பு, அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி கரம் மசாலா பொடி, ஒரு தேக்கரண்டி மல்லிப்பொடி, அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கிய இந்த மசாலாக்களை நன்கு சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஆவியின் வேக வைத்த சோயா உருண்டைகளை ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் பொரித்தெடுக்க வேண்டும். சோயா உருண்டையின் வெளிப்புறம் பொன்னிறமாக மாறும் வரை முன்னும் பின்னும் சேர்த்து பொறித்து எடுக்க வேண்டும். அதன் பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், பட்டை ஒன்று, கிராம்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

ஒரு கப் அரிசி மாவு போதும்.. ஸ்ரீலங்காவின் மிக ஃபேமஸான இனிப்புத் தொதல் செய்யலாம் வாங்க….

அதன் பின் அதை எண்ணெயில் அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை சென்றவுடன் நம் குறித்து வைத்திருக்கும் சோயா உருண்டைகளை அதில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் ஐந்து நிமிடம் குழம்பு கொதித்தால் போதுமானது. இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி இறக்கினான் சோயா உருண்டை குழம்பு தயார்.

Exit mobile version