ஒரு கப் அரிசி மாவு போதும்.. ஸ்ரீலங்காவின் மிக ஃபேமஸான இனிப்புத் தொதல் செய்யலாம் வாங்க….

சுட்டி குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான் இனிப்பு. அதிலும் விசேஷ நாட்களில் நம் வீட்டில் செய்யப்படும் சில வகையான இனிப்பு வகைகள் என்றும் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும். இன்று ஸ்ரீலங்காவின் மிக பேமஸான இனிப்புத் தொதல் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த இனிப்பு வகையை சிவப்பரிசி மாவு அல்லது பச்சரிசி மாவு வைத்து செய்யும் பொழுது மட்டுமே சுவை அருமையாக இருக்கும். ஒரு கப் தேங்காவிற்கு ஒன்றரை கப் சிவப்பரிசி மாவு என்பது அளவு.
அதை போல் ஒரு கப் தேங்காய் நன்கு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து மூன்று முறை பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் தேங்காவை வைத்து மூன்று கப் பால் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு கப் வெல்லத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் நாம் பிழிந்து வைத்திருக்கும் தேங்காய்ப்பால், வெல்லகரைசல், சிவப்பரிசி மாவு இவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். கட்டிகள் விழாத வண்ணம் ஒரு சேர கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் இந்த கலவை இருக்கும் கடாயை அடுப்பில் வைத்து விடலாம். மிதமான தீயில் இந்த கலவையை விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை கலந்து கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சாஸ் சேர்க்காமல் அருமையான பாஸ்தா! வறுத்து அரைத்த செட்டிநாடு ஸ்டைல் பாஸ்தா ரெசிபி இதோ…

தொடர்ந்து கலந்து கொடுக்கும் பொழுது இந்த கலவை அல்வா பதத்திற்கு கெட்டியாக வரும். அந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி பசு நெய் , நெய்யில் வறுத்த பத்து முதல் 15 முந்திரி பருப்புகளை இதனுடன் சேர்த்து இறுதியாக கலந்து கொள்ளலாம்.

கடாயில் ஓரங்களில் நாம் சேர்த்திருக்கும் நெய், தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்தால் இப்பொழுது இனிப்பு தயாராக மாறிவிட்டது. இதை ஒரு தட்டிற்கு மாற்றி மிதமான சூட்டில் அப்படியே சாப்பிட்டுவிடலாம்.

Exit mobile version