சிக்கன் மற்றும் மட்டனுடன் போட்டி போடும் சுவையில் தரமாக களமிறங்கிய சோயா மிளகு வறுவல்!

அசைவ உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத நேரங்களில் அசைவத்திற்கு இணையான அதே சுவை மற்றும் சத்து நிறைந்த உணவாக சோயா பார்க்கப்படுகிறது. இந்த சோயா வைத்து அசைவத்தின் அதே சுவையில் எளிமையான முறையில் சைவ உணவுகளை சமைத்தெடுக்கலாம். இந்த முறை சிக்கன் மற்றும் மட்டன் மிளகு வறுவலுக்கு இணையாக சோயா மிளகு வறுவல். இந்த சோயா மிளகு வறுவல் சப்பாத்தி, பரோட்டா, பூரி, தோசை, பருப்பு சாதம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும். வாங்க மிளகு வறுவல் செய்வதற்கு தேவையான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு கப் சோயாவை கொதிக்கும் வெந்நீரில் சேர்த்து ஐந்து முதல் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஊற வைத்தால் சுவை கூடுதலாக இருக்கும். பத்து நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி கூடுதலாக குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்கு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த மிளகு வறுவலுக்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஐந்து முந்திரி பருப்பு, இரண்டு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், சிறிதளவு கல்பாசி சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த பொருட்களை சிறிது நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக மாற்றிக் கொள்ளலாம். அடுத்ததாக அதை கடாயில் மூன்று தேக்கரண்டி கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சோயாவை சேர்த்துக் கொள்ளலாம்.

சோயா சேர்த்து எண்ணையோடு இரண்டு முறை கிளறி கொடுத்த பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரைத்தக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், நாம் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

கேரளா ஸ்பெஷல் பாலக்காடு ராமசேரி இட்லி! ரகசிய ரெசிபி இதோ….

இதனுடன் கூடுதல் காரத்திற்காக மூன்று அல்லது ஐந்து பச்சை மிளகாயை இரண்டாக கீரி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதை அடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்தே நிமிடத்தில் சுவையான பெப்பர் கிரேவி தயார்.

இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை அரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறினாள் சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version