சிக்கன் வைத்து செய்யும் அசைவ உணவுகள் அனைத்தையும் எளிமையான முறையில் சோயா வைத்து சுலபமாக செய்துவிட முடியும். சுவை மற்றும் மனம் மாறாமல் அதே பக்குவத்தில் இந்த முறை சிக்கன் சிப்ஸ் பதிலாக சோயா வைத்து அருமையான முறுமுறு சிப்ஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் 100 கிராம் அளவுள்ள சிறிய சோயாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு அப்படியே ஊற வைக்க வேண்டும்.
சோயா குறைந்தது பத்து நிமிடம் கொதிக்கும் தண்ணீரின் நன்கு ஊறினால் போதுமானது. அதன் பிறகு சோயாவை நன்கு பிழிந்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதை மையாக அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்துக் கொள்ளவும். சோயா மாவுடன் இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்காக ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுதுகள், ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கு, அரை தேக்கரண்டி உப்பு, மூன்று தேக்கரண்டி கான்பிளவர் மாவு, கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா, ஒரு கப் கார்ன்ஃப்ளார் மாவு, மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி, கால் தேக்கரண்டி உப்பு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சிப்ஸ் இன் வெளிப்பக்கம் முறுமுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கான்ஃப்ளக்ஸை நன்கு நொறுக்கி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் உருண்டை பிடித்து வைத்திருக்கும் சோயா மாவை வடை போல வட்டமாக தட்டி கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவு எடுத்து கான்ஃப்ளக்ஸ் இல் நன்கு பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரசம் சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் பொருந்தும் முட்டை தவா மசாலா!
இப்படி நாம் தயார் செய்து வைத்திருக்கும் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தயார் செய்து தனியாக ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் தட்டி வைத்திருக்கும் சிப்ஸ்களை ஒன்றன்பின் ஒன்றாக மிதமான தீயில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை குறித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான சோயா சிப்ஸ் தயார். எப்போதும் சிக்கன் சிக்ஸ்க்கு பதிலாக ஒரு முறையாவது இந்த சோயா சிப்ஸ் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.