ரெஸ்டாரன்ட் சுவையின் வீட்டிலேயே செய்யக்கூடிய முருங்கைக்கீரை மசாலா சூப்!

இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் வாரத்தில் மூன்று முறை முருங்கைக் கீரையை உணவில் எடுத்துக்கொண்டு வரும் பொழுது நல்ல மாற்றம் ஏற்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்து. இந்த முறை முருங்கைக்கீரை சாப்பிட பிடிக்காத குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு முருங்கைக்கீரை வைத்து அருமையான மசாலா சூப் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் இந்த சூப் செய்வதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி மிளகு, ஒன்றினை தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு பொறிந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது அதே கடாயில் 3 கப் முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் முருங்கை கீரைக்கு 250 மில்லி லிட்டர் தண்ணீர் வீதம் 750 மில்லி லெட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

குறைந்தது கீரை ஏழு முதல் 10 நிமிடம் வரை நன்கு கொதிக்க வேண்டும். கீரை வெந்து வரும் நேரத்தில் மூடி போடக்கூடாது. கீரை நன்கு கொதித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சூப் தயாராக உள்ளது.

சமைக்கத் தெரியாதவர்கள் கூட பத்தே நிமிடத்தில் வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் அருமையான சிக்கன் ரெசிபி!

இந்த சூப்பை மேலும் சுவைப்படுத்துவதற்காக ஒரு குட்டி கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய், 10 பல் வெள்ளை பூண்டு இடித்து சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பொன்னிறமான முறுமுறுவென இருக்கும் வெங்காயத்தை சூப்பின் மேல் பக்கமாக சேர்த்து கலந்து கொடுத்து குடிக்கும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.

முருங்கைக்கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இதுபோல சூப் செய்து குடிக்கும் பொழுது திகட்டாமல் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி குடிக்கும் அளவிற்கு அருமையாக இருக்கும்.

Exit mobile version