சமைக்கத் தெரியாதவர்கள் கூட பத்தே நிமிடத்தில் வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் அருமையான சிக்கன் ரெசிபி!

பொதுவாக சமைக்க தெரியாதவர்கள் சமைக்கும் பொழுது எளிமையான முறையில் சமைத்து முடித்து விட வேண்டும் என நினைப்பார்கள். மேலும் அவர்கள் சமைக்கும் உணவு சுவையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் . அந்த வகையில் இன்று சமைக்கத் தெரியாதவர்கள் மற்றும் சமையலுக்கு அதிகம் நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பவர்கள் என இருவருக்கும் பொருந்தும் வகையில் அருமையான மற்றும் எளிமையான சிக்கன் ரெசிபி இதோ…

ஒரு அகலமான இரும்பு கடாயில் ஒரு குழி கரண்டி என்னை சேர்த்து சூடு படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, 3 ஏலக்காய், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மூன்று பச்சை மிளகாய் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இதனுடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் 500 கிராம் அளவுள்ள சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும். ஒரு நிமிடம் வரை எண்ணையோடு சிக்கனை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக அதே கடாயில் நான்கு தேக்கரண்டி காஷ்மீரின் மிளகாய்த்தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு மசாலா ஓடு சிக்கனை கலந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்தும் பொழுது சிக்கன் மசாலா நல்ல அடர்ந்த சிவப்பு நிறத்தில் கிடைக்கும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி போட்டு வேக வைக்க வேண்டும். குறைந்தது மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் வந்தால் போதுமானது..

வருடத்திற்கு 20 நாள் மட்டுமே கிடைக்கும் ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் சாம்பாரா தோசை!

இதை இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கடாயை திறந்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். மிதமான தீயில் பத்து நிமிடம் வந்த பிறகு மசாலாவின் பச்சை வாசனை சென்று கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து சிக்கன் அருமையாக தயாராக இருக்கும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான மசாலா சிக்கன் தயார்.

இந்த சிக்கன் சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும். மேலும் இதை சமைப்பதற்கு வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாத சமயங்களில் எளிமையான முறையில் சமைத்து விடலாம்.

Exit mobile version