சேமியா வைத்து பாயாசம் செய்யும் பொழுது வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி சேமியா வைத்து உப்புமா செய்யும்பொழுது ஏற்படுவது இல்லை. இதுவாக உப்புமா என்றாலே பிடிக்காத பலருக்கு ரவை மாவை விட சேமியா உப்புமா மிகவும் பிடிக்காத உணவுப் பொருளாக பார்க்கப்படுகிறது. சேமியாவை பிடிக்காது என சொல்பவர்கள் கூட ஒரு முறை சாப்பிட்டு பார்த்து மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு சுவையான தேங்காய் சேவை சாதம் செய்வதற்கான ரெசிபி இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், கைப்பிடி அளவு கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.
தண்ணீரோடு நாம் சேர்த்த பொருட்கள் ஒரு கொதிவரும் நேரத்தில் சேமியாவை பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சேமியா சேர்த்து இரண்டு நிமிடத்தில் நீரில் இருந்து பிரித்து தனியாக வைத்து விட வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.
பச்சை மிளகாய் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும். கருவேப்பிலை நன்கு பொரிந்து வாசனை வரும் நேரத்தில் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் சேர்த்த பிறகு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து தேங்காய் பொன்னிறமாக மாறி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள் இல்லாத சமயங்களில் தக்காளி ஒன்று வைத்து தோசை மற்றும் சப்பாத்திக்கு குருமா செய்யலாம் வாங்க!
தேங்காயிலிருந்து நல்ல வாசனை வரும் நேரத்தில் நாம் வேக வைத்திருக்கும் சேமியாவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். சேமியா சேர்த்து நன்கு ஒரு முறை கிளறி கொடுத்து இறுதியாக கைப்பிடி அளவு தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான தேங்காய் சேவை சாதம் தயார்.
சேமியா சாப்பிடுவதற்கு தேங்காய் சாதம் போல அருமையாகவும் திகட்டாத வண்ணத்தில் இருப்பதால் சேமியா பிடிக்காத நபர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.