கேசரி என்றாலே ரவை வைத்து செய்வதுதான் வழக்கம். ஆனால் அதற்கு பதிலாக சேமியா வைத்து செய்யும் பொழுதும் கேசரியின் சுவை மாறாமல் தித்திப்பாக அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். பத்தே நிமிடத்தில் சேமியா கேசரி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, 5 பாதாம் பருப்பு, 10 காய்ந்த திராட்சை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் மீதம் இருக்கும் நெய்யில் ஒரு கப் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். வறுத்த இந்த சேமியாவை மற்றொரு தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் ஒரு கப் சேமியாவிற்கு இரண்டு கப் தண்ணீர் என்பது அளவு. அதன்படி இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணியை நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை அதில் சேர்த்து மிதமான தீயில் கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் சேமியா வெந்து தண்ணீர் வற்றிவிடும். அதன் பின் கேசரியின் நிறத்திற்காக கலர் வண்ணம் சேர்த்து கலந்து கொள்ளலாம். ஒரு கப் சேமியாவிற்கு முக்கால் கப் சர்க்கரை என்பது அளவு. அதன்படி முக்கால் கப் சர்க்கரையை நன்கு வந்திருக்கும் சேமியாவுடன் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் ஆக மாற்ற வேண்டுமா? வாங்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் மிளகு கோழி பிரட்டல்!
சர்க்கரை நன்கு கரைந்து சேமியாவுடன் கலந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு சேமியா இறுகி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இறுதியாக நாம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பாதாம், திராட்சைகளை கலந்து இறக்கினால் சுவையான சேமியா கேசரி தயார்.