காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் ஈசியான சாம்பார் சாதம்! ரெசிபி இதோ….

காய்கறிகள் இல்லாத சமயங்களில் எளிமையான முறையில் ஒரே சமையலாக முடிக்க வேண்டும் எனும் நினைக்கும் பட்சத்தில் இந்த சாம்பார் சாதம் ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். இந்த சாம்பார் சாதம் செய்வதற்கு காய்கறிகள் எதுவும் தேவைப்படாது. எளிமையான முறையில் சில நிமிடங்களிலேயே சாம்பார் சாதம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு குக்கரில் இரண்டு கப் அரிசி, ஒன்றரை கப் துவரம் பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் அளவிற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஒரு கப் அரிசிக்கு இரண்டு அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக இதில் அரைத்து கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் மற்றொரு கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், 4 பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் கொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் பாதியாக வதங்கியதும் நன்கும் இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கி வதக்கிக் கொள்ளலாம். இதில் இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது இதில் எலுமிச்சை பழ அளவு புளி கரைசல் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக தண்ணீர் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வெல்லம், சர்க்கரை என எதுவும் சேர்க்காமல் வாயில் வைத்ததும் கரையும் தித்திப்பான பொங்கல் ரெசிபி!

இப்பொழுது இது மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். அரிசி மற்றும் பருப்பு நன்கு வெந்து குழைந்து வந்திருக்கும். குழம்பு மசாலா தயாராக வந்ததும் அதை அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சாதம் சற்று கெட்டியாக இருக்கும் பட்சத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய் மற்றும் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான சாம்பார் சாதம் தயார்.

Exit mobile version