வெல்லம், சர்க்கரை என எதுவும் சேர்க்காமல் வாயில் வைத்ததும் கரையும் தித்திப்பான பொங்கல் ரெசிபி!

பொதுவாக இனிப்பு வகைகள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். எப்போதும் நாம் இனிப்பு செய்யும்பொழுது வீட்டில் உள்ள வெள்ளை சர்க்கரை அல்லது அச்சு வெல்லம், கருப்பட்டி பயன்படுத்தி செய்வது வழக்கமான ஒன்று. இந்த முறை சற்று வித்தியாசமாக தித்திப்பான அல்வா செய்வதற்கான விளக்கம் இதில் உள்ளது. இதில் அச்சு வெல்லம், சர்க்கரை, கருப்பட்டி இவற்றிற்கு பதிலாக சிறப்பான ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாங்க திக்கான பொங்கல் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு கப் நொய் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு ஏலக்காய்,, ஒரு சிட்டிகை உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில்கள் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

இப்பொழுது மூன்று விசில்கள் வந்த பிறகு மீண்டும் குக்கரை திறந்து இதனுடன் மூன்று கப் கரும்புச்சாறு சேர்த்து மீண்டும் இரண்டு விஷல்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும். மீண்டும் இரண்டு விசில்கள் வந்து குக்கரின் அழுத்தம் குறைந்த பிறகு உள்ளே இருக்கும் சாதம் கரும்புச்சாறில் நன்கு வெந்து பக்குவமாக இருக்கும்.

இப்பொழுது ஒருமுறை இனிப்பு சரிபார்த்துக் கொள்ளலாம் தேவைப்பட்டால் மட்டுமே அரை கப் அளவிற்கு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லம் சேர்த்த பிறகு மீண்டும் நன்கு கைவிடாமல் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத வறுத்து அரைத்த மணத்தக்காளி குழம்பு!

அடுத்ததாக ஒரு குட்டி கடாயில் தாராளமாக மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி, காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் தயார் செய்து வைத்திருக்கும் பொங்கலில் சேர்த்து கிளறி கொள்ளலாம்.

இப்பொழுது சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார். இதில் இனிப்பிற்காக பெரும்பாலும் கரும்புச்சாறு சேர்த்து செய்துள்ளதால் சுவை சற்று வித்தியாசமாகவும் தித்திப்பான சுவையிலும் அருமையாக இருக்கும். எப்போதும் ஒரே போல சர்க்கரை பொங்கல் செய்யாமல் இதுபோல வித்தியாசமாக செய்து மகிழலாம்.

Exit mobile version