வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஆக எளிமையான முறையில் கிள்ளி போட்ட மண மணக்கும் சாம்பார்!

வாரத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது சாம்பார் வைப்பது வழக்கமாக இருப்பவர்களுக்கு இந்த சாம்பார் ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். எப்போதும் போல ஒரே மாதிரியாக சாம்பார் செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்யும் பொழுது சாப்பிடும் நேரங்களில் சலிப்பு ஏற்படாமல் இருக்கும். வாங்க இந்த முறை சற்று வித்தியாசமாக சுவை கூடுதலாக கொத்தமல்லி வாசத்துடன் கிள்ளி போட்ட சாம்பார் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் 150 கிராம் அளவுள்ள துவரம்பருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைமணி நேரம் குறைந்தது ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் 10 பல் வெள்ளை பூண்டு ,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய், இரண்டு நன்கு பழுத்த தக்காளி பழங்கள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி கல் உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் தேவையான அளவு தண்ணீர் கலந்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பருப்பு வேக வைக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி விளக்கினை சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் பருப்பு வெந்துவிடும். மூன்று விசில்கள் வந்த பிறகு குக்கரின் அழுத்தம் குறைந்து திறந்து பருப்பை நன்கு மசிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், காய்ந்த வத்தல் மூன்று, கைப்பிடி அளவு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

ட்ரெண்டிங்கில் இருக்கும் பச்சை மாங்காய் ரசம், பூண்டு துவையல் ரெசிபி இதோ….

இந்த தாளிப்பில் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும். நன்கு வெந்து வரும் பருப்பில் தாளிப்பை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கிள்ளி போட்ட மண மணக்கும் சாம்பார் தயார்.