வாரத்தில் இரு முறை கட்டாயம் வைக்கும் சாம்பாரை மணக்க மணக்க அனைத்து காய்கறிகளும் சேர்த்துவித்தியாசமான சுவையில் செய்வதற்கான ரெசிபி இதோ!

நம் வீடுகளில் பலவிதமான குழம்புகள் தினமும் வைத்தாலும் வாரத்திற்கு இருமுறையாவது கண்டிப்பாக இந்த சாம்பார் வைப்பது வழக்கம். அந்தந்த கால நிலைக்கு ஏற்ப கிடைக்கும் காய்கறிகளை வைத்து திகட்டாக காரசாரத்துடன் அருமையான சாம்பார் அடிக்கடி வைத்திருந்தாலும் அனைத்து காய்கறிகளை சேர்த்து கெட்டியாக ஒரு சாம்பார் செய்யும் பொழுது அதன் சுவை சிறப்பாக இருக்கும். பல விதமான காய்கறிகளை சேர்த்து ஊரே மணக்கும் சாம்பார் செய்வதற்கான ரெசிபி இதோ….

இந்த சாம்பார் செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 10 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இந்த கலவையை இரண்டு அல்லது மூன்று நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

இந்த கலவையுடன் சாம்பார் செய்வதற்கு தேவையான பூசணிக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், உருளைக்கிழங்கு, மாங்காய், புடலங்காய், சௌசௌ என பலவிதமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை மீண்டும் மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து நிமிடம் கழித்து இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் வரை மசாலா காய்கறிகள் மீது நன்கு சேரும் வரை கலந்து கொடுத்து இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

காய்கறிகள் நன்கு வெந்ததும் ஊற வைத்திருக்கும் எலுமிச்சை பழ அளவு புளி கரைசல், வேக வைத்திருக்கும் துவரம் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்துக் கொண்டால் சாம்பாரின் சுவை சற்று வித்தியாசமாகவும் கூடுதலாகவும் இருக்கும். இந்த கலவையை நன்கு கலந்து கொடுத்து பத்து நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த சாம்பார் கொதித்து வரும் நேரத்தில் வரும் வாசனை சாம்பாரின் சுவையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

இனிப்பு, புளிப்பு, கசப்பு என அனைத்து விதமான சுவையும் நாவில் நர்த்தனம் ஆட வைக்கும் நாகர்கோவில் ஸ்பெஷல் நார்த்தங்காய் பச்சடி!

பத்து நிமிடம் கழித்து கைப்பிடி அளவு கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சுவையான சாம்பார் தயார். அடுத்ததாக இந்த சாம்பார் இருக்கு ஒரு சிறிய கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, 5 காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கறிவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு தாழித்து கலந்து இறக்கினால் போதுமானது.

ஊரே மணக்கும் இந்த சாம்பார் சாதம், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் என அனைத்திற்கும் சிறப்பாக இருக்கும்.

Exit mobile version