சில வகையான உணவுகளை சமைப்பதிலும் சரி சாப்பிடுவதிலும் சரி எளிமையாக இருந்தாலும் சுவையோ அமிர்தமாக இருக்கும். சமைக்கத் தெரியாதவர்கள் கூட எளிதில் சமைக்க முடியும் என்ற வகையில் பல வகையான உணவுகள் உள்ளது. அப்படி எளிமையாக சமைப்பதற்கு சில பக்குவமான டிப்ஸ்கள் மட்டுமே போதுமானது. வாங்க சமையலை மேலும் சுவையாக மாற்ற உதவும் அருமையான டிப்ஸ்கள் இதோ..
அரிசி ரவை வைத்து உப்புமா செய்யும் பொழுது முதலில் அந்த ரவையை தண்ணீர் தெளித்து நீராவியில் வேகவைத்து அதன் பின் உப்புமா செய்யும் பொழுது சுவை அதிகமாக இருக்கும்.
உருளைக்கிழங்கு, வாழைக்காய் வைத்து பொடிமாஸ் செய்யும் பொழுது சமைத்து முடித்து இறுதியாக கடாயை இறக்கும் பொழுது அரை தேக்கரண்டி எலுமிச்சை பல சாறு சேர்த்து கலந்து இறக்கினால் சுவை கூடுதலாக இருக்கும்.
மோர் குழம்பு செய்யும் பொழுது இறுதியாக தாளித்திற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் குழம்பு நல்ல வாசமாக இருக்கும்.
மட்டன் எளிதில் பஞ்சு போல வெந்து விட மட்டன் வேக வைக்கும் பொழுது அதனுடன் சிறிய துண்டு பப்பாளி சேர்த்து வேகவைத்தால் எளிதில் வெந்துவிடும்.
பொதுவாக கிழங்கு வகைகள், பருப்பு வகைகள், பயிர் வகைகள் இவற்றை வேக வைக்கும் பொழுது அவை நன்கு வந்த பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
பலகாரங்கள் செய்வதற்கு எண்ணெயை சூடு படுத்தும் பொழுது அதில் சிறிதளவு இஞ்சி தட்டி சேர்த்து பொறித்து எடுத்து அதன் பின் அந்த எண்ணையில் பலகாரம் செய்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது.
பருப்பு உருண்டை குழம்பு செய்வதற்கு பருப்பு ஊற வைக்கும் பொழுது அதனுடன் கைப்பிடி அளவு அரிசி சேர்த்து ஊறவைத்து அதன் பின் மாவு தயார் செய்து உருண்டை குழம்பு வைக்கும் பொழுது உருண்டை உடையாமல் அப்படியே இருக்கும்.
வெஜிடபிள் பிரியாணி செய்யும் பொழுது குக்கரை திறந்தவுடன் நெய்க்கு பதிலாக ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறி கொடுத்து இறக்கினான் சுவையாகவும் சாதம் உதிரி உதிரியாகவும் இருக்கும்.
மீந்து போன பழைய சாதத்தில் இப்படி ஒரு ரெசிபியா? வாயை பிளக்க வைக்கும் சூப்பர் ரெசிபி இதோ!
முள்ளங்கியை வட்ட வடிவில் நறுக்கிய பிறகு சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அதன் பின் சமைத்தால் முள்ளங்கி வாசம் வெளியே தெரியாது.
சூடான பாலில் எலுமிச்சை சாறு கலந்து பன்னீர் செய்வதை விட சற்று வெதுவெதுப்பாக ஆறு இருக்கும் பாலில் தயிர் கலந்து பன்னீர் செய்யும் பொழுது பன்னீர் மிருதுவாக இருக்கும்.