வீடுகளில் பார்த்து பார்த்து பக்குவமாக தரமான பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து சுவையான சமையல் செய்தாலும் சில நேரங்களில் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றும். ஆனால் வீட்டில் பெரியவர்கள் சமைக்கும் பொழுது எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதமாக இருக்கும். அதற்கு சமையலில் அவர்களுக்கு இருக்கும் அனுபவமும் சில நுணுக்கமான சமையல் டிப்ஸ்கள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த முறை நாமும் சமையலில் வல்லுனராக மாற உதவும் எளிமையான சமையல் டிப்ஸ் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு வேக வைக்கும் பொழுது உடையாமல் இருக்க சிறிதளவு எலுமிச்சை சாறு தண்ணியோடு கலந்து அந்த நீரில் வேக வைத்தால் உருளைக்கிழங்கு அதிகமாக வெந்தாலும் உடைந்து வராது.
ஆப்பம் சுவை கூடுதலாக வரவேண்டும் என நினைத்தால் ஆப்பத்திற்கு மாவு தயார் செய்த பிறகு அந்த மாவில் தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் கழித்து ஆப்பம் சுடும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.
இட்லிக்காக மாவு அரைக்கும் போது மாவில் சிறிதளவு தண்ணீர் அதிகரித்து விட்டால் நம் வீட்டில் இருக்கும் அரிசி மாவை சிறிதளவு எடுத்து இட்லி மாவுடன் கலந்து அதன் பின் நம் சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது கெட்டியாக மாறிவிடும்.
பூரி நன்கு புசுபுசுவெனவும் பொன்னிறமாக வரவேண்டும் என நினைத்தால் கோதுமை மாவுடன் இரண்டு தேக்கரண்டி ரவை, அரை தேக்கரண்டி சர்க்கரை, வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து பூரிக்கு மாவு பிசைந்தால் நன்கு புசுபுசுவென பொன்னிறமாக வரும்.
வெங்காயம், தக்காளி என எதுவும் சேர்க்காமல் எளிமையான பாகற்காய் தொக்கு! ரெசிபி இதோ….
தக்காளி சட்னியின் சுவை மற்றும் மனம் கூடுதலாக இருக்க ஒரு தேக்கரண்டி வறுத்த எள் சேர்த்து நன்கு வதக்கி அதன் பின் சட்னி அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
வீட்டில் பக்கோடா செய்யும் பொழுது பக்கோடா நன்கு முறுமுறுப்பாக வரவேண்டும் என நினைத்தால் அதற்கு 500 கிராம் அளவிற்கு மாவு எடுக்கும் பொழுது அதற்கு 50 கிராம் அளவிற்கு ரவை சேர்த்து செய்தால் நல்ல முறுமுறுப்பாக இருக்கும்.