சில உணவு வகைகளின் சமையல் முறைகள் கேட்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும் சமைத்து பார்க்கும் பொழுது எளிமையாக இருந்தாலும் சுவை அவ்வளவு திருப்தியாக இருக்காது. இது போன்ற சமயங்களில் நுணுக்கமான சில சமையல் டிப்ஸ் பயன்படுத்தி சமைக்கும் பொழுது எவ்வளவு கடினமான ரெசிபியாக இருந்தாலும் எளிமையாகவும் அதே சுவையிலும் பார்ப்பதற்கு சிறப்பாகவும் செய்து முடிக்கலாம். இதுபோல சமையலுக்கு உதவும் அருமையான சமையல் குறிப்புகள் இதோ…
குழம்பில் சேர்க்கும் வெந்தயம் மிகவும் மனமாக இருக்க சமையலில் சேர்ப்பதற்கு முன்பு லேசாக கடாயில் நன்கு வறுத்து அதன் பின் குழம்பில் சேர்க்கும் பொழுது நல்ல மனமாக இருக்கும்.
வீட்டில் தயார் செய்யும் நெய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க நெய் காய்ச்சி பொழுது ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து காய்ச்சி அதன் பிறகு பதப்படுத்தினால் அடுத்த நாள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
கீரை வைத்து கடையல், பருப்பு, குழம்பு என வகை வகையாக செய்யும் பொழுது அதன் சுவையை மேலும் அதிகரிக்க சமையலில் இறுதியாக ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையும் வாசமும் அருமையாக இருக்கும்.
குக்கரில் பாஸ்மதி அரிசியை சமைக்கும் பொழுது சாதம் குலையாமல் மற்றும் ஒட்டாமல் இருக்க அரிசியுடன் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்து கொடுத்து வேக வைக்கும் பொழுது சாதம் உதிரி உதிரியாக நன்கு வெந்து வரும்.
பத்தே நிமிடத்தில் அரிசி மாவு இல்லாமல் முறுமுறு தோசை ரெசிபி!
அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு வறுவல் மேலும் சுவை அதிகமாக தெரிவதற்கு ஒரு தேக்கரண்டி புளிக்காத தயிர் சேர்த்து சமைத்தால் நல்ல முறுமுறுப்பாக இருக்கும்.
பச்சைப்பயிறு குழம்பு செய்யும் பொழுது பயிரை வெறும் கடாயில் லேசாக வருத்து அதன் பின் ஒன்னு இரண்டாக இடித்து குழம்பு செய்யும் பொழுது சுவை மேலும் அருமையாக இருக்கும்.