சாதாரண சமையலை அசத்தல் சமையலாக மாற்றும் அருமையான சமையலறை டிப்ஸ்கள்!

சமைக்கும் பொழுது எவ்வளவுதான் கவனமாக சமைத்தாலும் சில நேரங்களில் சுவை மற்றும் வாசத்தின் குறைபாடுகள் ஏற்படுவது உண்மைதான். அதற்கு நாம் சில தந்திரங்களை கையாளும் பொழுது சுவை மாறாமல் நீண்ட நேரம் உணவை புதிது போல மாற்ற முடியும். எளிமையாகவும் சமைத்து அனைவரையும் திருப்தி படுத்த யாருக்கும் தெரியாத சமையலறை ரகசியங்கள் இதோ…

வெங்காயம் நறுக்குவதற்கு முன்பாக கத்தியை சூட்டு செய்துவிட்டு அதன்பின் வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.

அதிகம் கனமாக உள்ள இரும்புக்கல்லை தோசைக்கும் கணம் சற்று குறைவாக இருக்கும் கல்லை சப்பாத்திக்கும் பயன்படுத்த வேண்டும்.

சாதம் வடிக்கும் பொழுது சிறிது குலைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கலந்து இறக்கினால் உதிரி உதிரியாக மாறிவிடும்.

மெதுவடை மொறுமொறுவென்று இருக்க வேண்டுமா அப்போது உளுந்தம் பருப்புடன் கையளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்து அந்த மாவில் வடை செய்தால் நன்கு முறுமுறுவென இருக்கும்.

கீரை சமைக்கும் பொழுது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்து கடைந்தால் கீரையின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

பருப்பு வேக வைக்கும் பொழுது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் மிகவும் ருசியாகவும் நீண்ட நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

தோசை மாவு, சப்பாத்தி மாவு என எதுவும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் ஹெல்த்தியான பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி!

காரக் குழம்பு சமைத்து அதில் காரம் சற்று அதிகமானால் சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் காரத்தின் வீரியம் உடனே குறைந்து விடும்.

சாதம் ஒட்டாமல் உதிரியாக இருக்க அரிசி ஊற வைக்கும் பொழுது ஐஸ் கட்டிகளை சேர்த்து ஊற வைத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.

கருவேப்பிலை வாடாமல் மற்றும் நிறம் மாறாமலும் இருக்க தண்ணீரில் அலசி உலர வைத்து பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது.

முருங்கை காய்களை துண்டு துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்