இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , கிச்சடி என அனைத்திற்கும் வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தான் பொதுவான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் இந்த முறை வெங்காயம், தக்காளி, தேங்காய் இல்லாமல் அருமையான சட்னி செய்யலாம் வாங்க. இந்த சட்னி காலை உணவிற்கு மட்டுமில்லாமல் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடவும் சுவை அருமையாக இருக்கும். இந்த சட்னி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..
இந்த சட்னி செய்வதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக சிறிய எலுமிச்சை பல அளவு புளி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு அரை தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் ஏழு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த பொருட்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் சிறிய துண்டு இஞ்சி 2, 5 பல் வெள்ளை பூண்டு, ஊற வைத்திருக்கும் புளி, ஒரு சிறிய துண்டு வெல்லம், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத நார்ச்சத்து நிறைந்த கருவேப்பிலை தொக்கு!
இப்பொழுது நமக்கு சுவையான சட்னி தயார். இதற்கு ஒரு சிறிய தாளிப்பு தயார் செய்து கொள்ளலாம். ஒரு சிறிய கடாயில் அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
இப்பொழுது சுவையான சட்னி தயார். இந்த சட்னி காலை உணவுகளுக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுதும் சுவை அருமையாக இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் பொழுது அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.