கல்யாண வீட்டு சுவையில் காரசாரமான சுவை நிறைந்த சேனைக்கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்கள்!

சேனைக்கிழங்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த ஒரு கிழங்கு வகை ஆகும். சேனைக்கிழங்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது. மேலும் உடலில் அதிக எடையை குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை தவிர்க்க சேனைக்கிழங்கு துணை புரிகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திட சேனைக்கிழங்கு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சேனைக்கிழங்கில் மன அழுத்தத்தை தணிக்க உதவக்கூடிய மூலக்கூறுகள் நிறைந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள். இத்தனை நன்மைகள் நிறைந்த சேனைக்கிழங்கை வைத்து காரசாரமான சுவையான சேனைக்கிழங்கு மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஈஸியா செய்யலாம் கசப்பான பாகற்காய் வைத்து சுவையான பாகற்காய் மசாலா…!

சேனைக்கிழங்கு மசாலா செய்வதற்கு முதலில் எட்டு பல் பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி ஆகியவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். சேனைக்கிழங்கை கொஞ்சம் அகலமாக கால் அங்குல கணத்தில் நறுக்கிக் கொள்ளவும். இதனை மோரில் தண்ணீர் விட்டு கலந்து அதில் போட்டு வைக்க வேண்டும். இதனை நன்றாக கரண்டி வைத்து கலக்கி இரண்டு முறை அலசி எடுக்க வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து நறுக்கி வைத்திருக்கும் சேனைக்கிழங்கை அதில் போட்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். சற்று வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் இரண்டுமேசை கரண்டி அளவு தேங்காய் பூ, அரை ஸ்பூன் சோம்பு, ஒரு மேசை கரண்டி போட்டு கடலை, ஒரு ஸ்பூன் கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் மூன்று மேஜை கரண்டி எண்ணெய் காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பிரிஞ்சி இலை, ஒரு துண்டு பட்டை, கால் ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும்.

தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி சிறிதளவு மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் சோம்பு சீரகத்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது வேகவைத்த சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். நன்றாக சுருண்டு வரும் வரை குறைவான தீயில் வைத்து கிளற வேண்டும்.

ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை வைத்து சூப்பரான சத்தான சன்னா மசாலா கிரேவி…!

இந்த மசாலாவிற்கு எண்ணெய் கூடுதலாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான சேனைக்கிழங்கு மசாலா தயாராகிவிட்டது.

Exit mobile version