சிலருக்கு இப்போதெல்லாம் இள வயதிலேயே சர்க்கரை நோய் வந்து விடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் மருத்துவர்கள் அரிசி உணவை தவிர்த்து விடுங்கள் என்று கண்டிப்புடன் கூறி விடுகிறார்கள். ஆனால் தினமும் இட்டலி, தோசை என்று சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு காலை டிபன் தோசை இல்லாமல் நிறைவடையாது. உடல் நலனுக்கும் தீமை தராத அதே சமயம் உங்களுக்கு பிடித்தமான வகையில் தோசையும் செய்து சாப்பிட விரும்பினால் கோதுமை தோசையை இப்படி முயற்சி செய்து பார்க்கலாம்.
தோசை மாவு தீர்ந்துடுச்சா கவலை வேண்டாம்… சூடா மொறு மொறுன்னு ரவா தோசை இப்படி செய்யுங்கள்!
கோதுமை தோசை செய்வதற்கு ஒரு கப் அளவு கோதுமை மாவினை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கோதுமை மாவுடன் அரை டம்ளர் அளவு கெட்டியான மோர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள் மாவு அதிக கெட்டியாக இல்லாமல் தோசை ஊற்றக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடி பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து நான்கு வதக்கவும். பின் ஒரு துண்டு இஞ்சி துருவி சேர்க்கவும். ஒரு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும் அப்படியே மாவில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மாவு தோசை ஊற்றக்கூடிய பதத்தில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் இப்பொழுது தோசைக்கல்லை அதிகம் காய விடாமல் மிதமான சூட்டில் ஒரு துணியைக் கொண்டு எண்ணையை தடவவும். தோசை ஊற்றுவது போல மாவை நடுவில் ஊற்றி தடவாமல் சுற்றிலும் ஊற்றி பின் நடுவில் சரி செய்யவும்.
மாவை சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக விட வேண்டும் ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். தோசையை அதிக கனமாக ஊற்றி விடாதீர்கள். மெல்லியதாக தான் ஊற்ற வேண்டும் சற்று மொறு மொறுப்பாக இளம் தீயில் வேக வைத்து எடுக்கவும். இதனை சூடாக காரச் சட்னியுடன் பரிமாறலாம்.
தோசை பிரியரா நீங்கள்? இதோ உங்களுக்காக மணமணக்கும் மசால் தோசை…!
அவ்வளவுதான் அட்டகாசமான கோதுமை தோசை தயார்! இது சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற காலை மற்றும் இரவு உணவாகும்.