கிராமத்து சுவையில் அட்டகாசமான வீடே மணக்கும் நாட்டுக்கோழி குழம்பு…!

கோழி குழம்பு என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்று அதிலும் நாட்டுக்கோழி குழம்பு என்றால் சொல்லவா வேண்டும்??.. அதன் சுவையும் மணமும் தனி தான். மேலும் கடைகளில் கிடைக்கும் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிகள் உடலுக்கும் நன்மை தரக்கூடிய ஒன்று. நாட்டுக்கோழி உடலுக்கு வலிமை தரக்கூடிய ஒன்று. பிராய்லர் கோழியை ஒப்பிடுகையில் நாட்டுக்கோழி புரதச்சத்து மிகுந்தும் கொழுப்புச்சத்து மிகக் குறைவாகவும் உள்ளது. இந்த நாட்டுக்கோழியை வைத்து எப்படி சுவையான நாட்டுக்கோழி குழம்பு கிராமத்து ஸ்டைலில் வைக்கலாம் என்பதை பார்ப்போம்.

அடடா…! காரசாரமான பெப்பர் சிக்கன்! அடுத்த முறை சிக்கன் எடுத்தால் இப்படி செய்து பாருங்கள்.

நாட்டுக்கோழி குழம்பு செய்ய முதலில் 50 கிராம் அளவு இஞ்சி மற்றும் எட்டு பல் பூண்டை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கோழியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நறுக்கிய துண்டுகளில் ஆங்காங்கே சிறிதாக கீறிக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் தனியா தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியன சேர்த்து அரை எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து நன்கு பிசறி வைத்து விட வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காய், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை, அரை ஸ்பூன் சோம்பு ஆகியன சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் மூன்று மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் அல்லது 150 கிராம் அளவு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

மணமணக்கும் நாட்டுக்கோழி ரசம்… எல்லா உடல் நல பிரச்சனையையும் விரட்டிடும் பாருங்க!

வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு பழித்த தக்காளிகளை சேர்த்து மென்மையாகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும் இப்பொழுது விசிறி வைத்திருக்கும் நாட்டுக்கோழியை சேர்த்து எண்ணெயில் சிறிது நேரம் வதக்கி தண்ணீர் ஏதும் சேர்க்காமல் மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும் நாட்டுக்கோழி நன்கு வந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்க விட வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்து காரம் கூடுதலாக தேவைப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம் அவ்வளவுதான் மனமணக்கும் நாட்டுக்கோழி குழம்பு தயாராகி விட்டது.

Exit mobile version