மீதமான சப்பாத்தி வைத்து அருமையான வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ்!

சப்பாத்தி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத்தியுடன் வழக்கமாக குருமா போன்ற சைட் டிஷ் வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அந்த சப்பாத்தியை வைத்து அல்லது ஏற்கனவே செய்து மீதமான சப்பாத்தியை வைத்து அதில் நிறைய காய்கறிகள் சேர்த்து வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ் செய்தால் அது குழந்தைகளுக்கு இன்னும் பிடிக்கும். வித்தியாசமாக அதே சமயம் சுவையாகவும் இருக்கும் இந்த வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உணவகங்களில் கிடைக்கும் மொறுமொறு பிரெஞ்சு ப்ரைஸ்.. இனி வீட்டிலேயே செய்யலாம்…!

வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ் செய்வதற்கு நான்கு சப்பாத்திகளை எடுத்து முதலில் அதை நான்காக மடித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இதனை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பெரிய வெங்காயம், அரை குடைமிளகாய், அரை கப் அளவிற்கு முட்டைக்கோஸ் ஆகியவற்றையும் நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சி பொடி பொடியாக நறுக்கி, பூண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு மேசை கரண்டி எண்ணெய் சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது நறுக்கி வைத்த குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் துருவிய கேரட் சேர்த்து கலந்து விடவும்.

ஒரு ஸ்பூன் அளவு சோயா சாஸ், இரண்டு ஸ்பூன் அளவுக்கு தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்த பின்பு நூடுல்ஸ் போல வெட்டி வைத்த சப்பாத்தியையும் இதனுடன் சேர்த்து கலந்து விடலாம். அனைத்தும் நன்கு கலந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். இதில் பயன்படுத்திய காய்கறிகளை உங்கள் விருப்பத்திற்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்ளலாம் மஷ்ரூம், சிக்கன் என நீங்கள் விரும்பிய உணவுப் பொருட்களை வைத்தும் செய்யலாம்.

வாவ்…! மாலை நேர காபி அல்லது டீயுடன் சூடாக சாப்பிட சூப்பரான ஸ்னாக்ஸ்.. பன்னீர் கட்லட்!

அவ்வளவுதான் சுவையான, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி நூடுல்ஸ் தயார்!