குழந்தைகளுக்கு சூப்பரான வெஜிடபிள் பிரியாணி…! லஞ்ச் பாக்ஸுக்கு இப்படி செய்து பாருங்கள்…

பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கக் கூடிய பிரியாணி பல்வேறு வகைகளில் உள்ளது. குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிடாவிட்டால் இந்த பிரியாணியை சுவையாக காய்கறிகள் வைத்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது குழந்தைகளுக்கு உகந்த வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். இதனை குழந்தைகளுக்கு மதிய உணவிற்கும் கொடுத்து விடலாம்.

உடலுக்கு நன்மை தரும் காளான் வைத்து சுவையான காளான் பிரியாணி…!

இரண்டு கப் அளவு பிரியாணி அரிசி எடுத்து அதனை கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இப்பொழுது 10 பச்சை மிளகாய், 10 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கொத்தமல்லி, மற்றும் புதினா சேர்த்து மை போல விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். (உங்கள் குழந்தைகள் காரத்தை விரும்பாவிட்டால் இதில் மிளகாயை குறைத்துக் கொள்ளலாம்.)

சிறிதளவு காலிபிளவரை எடுத்து சுடு தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து கழுவிக்கொள்ள வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் சிறிதளவு நெய் சேர்த்து அதில் இரண்டு பட்டை, இரண்டு பிரியாணி இலை, நான்கு கிராம்பு, 4 ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் ஏற்கனவே அரைத்த விழுதை சேர்த்து குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.

இப்பொழுது பொடியாக நறுக்கிய இரண்டு கேரட், 10 பீன்ஸ், நான்கு தக்காளி, நூறு கிராம் அளவிற்கு பச்சைப்பட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பிறகு காலிஃப்ளவரையும் போட்டு ஏற்கனவே கழுவி வைத்திருக்கும் அரிசியை சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு கப் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும்.

அட.. என்ன சுவை! தேநீருக்கு மாற்றாக மாலை நேரத்தில் இந்த தக்காளி சூப் குடித்து பாருங்கள்!

இதனை இரண்டு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். விசில் வந்த பிறகு விசில் அடங்கியதும் குக்கரை திறந்ததும் சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கலாம். முந்திரி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வறுத்து இதன் மேல் தூவிக் கொள்ளலாம். இதற்கு வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்!