ஆடி அமாவாசை முக்கியமான ஒரு விரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு படையல் அளிப்பதுதான் அந்த நாளின் சிறப்பு. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்த காரணத்தால் இரண்டாவதாக வந்த ஆடி 31 அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி அமாவாசையாக கருதி அன்று தான் முன்னோர்களை வழிபட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆடி அமாவாசையில் வடை பாயசத்தோடு சைவ உணவுகள் செய்து படைத்து முன்னோர்களை வழிபடுவர். இந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு வடை பாயசத்தை இப்படி செய்து முயற்சித்து பாருங்கள்…!
அடடே என்ன சுவை! சுவையான மாலை நேர சிற்றுண்டி மசாலா பணியாரம்…!
வடை:
ஒரு ஆழாக்கு உளுத்தம் பருப்பு, ஒரு மேஜை கரண்டி பச்சரிசி, மற்றும் ஒரு மேஜை கரண்டி துவரம் பருப்பு எல்லாவற்றையும் தண்ணீரில் அலசி ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவை ஊரியதும் கிரைண்டரில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மாவாக ஆட்டிக் கொள்ளவும். மாவு கெட்டியாக ஆட்ட வேண்டும் அதிக தண்ணீர் விடக்கூடாது.
ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகத்தூள் மாவோடு சேர்க்க வேண்டும். பின் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி அதையும் மாவில் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடாயில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். தயார் செய்து வைத்த மாவை ஒரு வாழை இலையில் தட்டி மெதுவாக எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்க வேண்டும். குறைவான தீயில் எடுத்தல் அவசியம்.
உளுத்தம் பருப்புடன் துவரம்பருப்பு மற்றும் பச்சரிசி சேர்ப்பதால் இந்த வடை அதிக அளவு எண்ணெயை குடிக்காது அதே சமயம் நன்கு சிவந்து மொறு மொறுப்பாக இருக்கும் ஒரு வேளை மாவு அதிகம் எண்ணெய் குடிப்பதாக தோன்றினால் இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவினையும் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
அவ்வளவுதான் சூடான மொறு மொறு வென்ற உளுந்த வடை தயாராகிவிடும்!
சேமியா பாயசம்:
100 கிராம் சேமியாவை நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 100 கிராம் ஜவ்வரிசியை தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வறுத்த சேமியாவை இதில் சேர்த்து அரை லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும் பாலில் சேமியா நன்றாக வேக விட வேண்டும்.
இந்த ஆடி வெள்ளி அன்று பூஜை நெய்வேத்தியத்திற்கு பாசிப்பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!
சேமியா ஓரளவு வெந்ததும் அரை கப் சீனியை போட்டு கிளற வேண்டும். சீனி கரைந்து பாயாசம் வெந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யில் ஆறு முந்திரி பருப்புகளை போட்டு வறுத்து எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான எளிமையான சேமியா பாயாசம் தயார்!