கை, கால், மூட்டு வலி பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் உளுத்தங்கஞ்சி… வாரம் ஒரு முறை இதைக் குடித்துப் பாருங்கள்!

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கத்தால் இள வயதிலேயே பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். சாதாரணமான ஒரு சிறிய வேலையை செய்தால் கூட இடுப்பு வலி, கால் வலி, மூட்டு வலி என்று அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் நம் உணவில் தேவையான அளவு சத்துக்களை நாம் எடுத்துக் கொள்ளாததுதான். இடுப்பு, கை, கால் எலும்புகள் வலுப்பெறுவதற்கு போதுமான சத்துக்கள் நம் உணவில் இல்லை. எலும்புகளுக்கு வலு சேர்க்கும் ஒரு ஆரோக்கியமான உணவு தான் உளுத்தங்கஞ்சி.

அருமை…! மூட்டு வலி பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்!

எலும்புகளுக்கு மட்டுமில்லாமல் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்சனை போன்றவற்றையும் இந்த உளுத்தங்கஞ்சி தீர்த்து வைக்கிறது. இந்த உளுத்தங்கஞ்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் பலவிதமான நன்மைகளை பெற முடியும். இதற்காக தனியாக உளுந்து ஊற வைத்து அரைப்பது உங்களுக்கு கடினம் என்று தோன்றினால், என்றைக்கு இட்லி தோசைக்கு மாவு தயாரிக்கிறீர்களோ அன்று மட்டுமாவது இந்த உளுத்தங்கஞ்சிக்கு என கூடுதலாக உளுந்து ஊறவைத்து அரைத்து இந்த கஞ்சியை தயாரித்து குடித்துக் கொள்ளுங்கள்.

இந்த உளுத்தங்கஞ்சியை தயார் செய்ய நன்கு சுத்தம் செய்த 100 கிராம் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உளுந்து ஊறிய பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து நன்கு மசியும்படி அரைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு 100 கிராம் அளவு வெல்லத்தை அதில் போட்டு கரைய விட வேண்டும் வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த மாவை சேர்க்க வேண்டும். மாவை நன்கு கொதிக்க விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வடிகட்டி வைத்த வெல்லம் தண்ணீரை இந்த மாவோடு சேர்க்கவும். இதை நன்கு கிளற வேண்டும்.

இந்த ஆடி வெள்ளி அன்று பூஜை நெய்வேத்தியத்திற்கு பாசிப்பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

பின்பு அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், அரை ஸ்பூன் சுக்கு பொடி சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக துருவி வைத்திருக்கும் அரை கப் தேங்காய் துருவலை இதனோடு சேர்த்து கிளறி விட வேண்டும்.

அவ்வளவுதான் சத்தான சுவையான உளுத்தங்கஞ்சி தயாராகி விடும்…!